மகாராட்டிராவில்  பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் விரைவில் ஒன்று சேரும் என  சிவசேனாவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான மனோகர் ஜோஷி தெரிவித்துள்ள கருத்து மகாராஷ்டிரா அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது.  மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாலும் ,  முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற மோதலில்  30 ஆண்டு காலமாக நீடித்த  கூட்டணி உடைந்தது .

 

பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியல் நேர் எதிர் துருவத்தில் நின்ற காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன்  குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது.  கடந்த மாதம் 28ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆகவும் மூன்று கட்சிகளைசே சேர்ந்த தலா இரண்டு பேர் மந்திரிகளாகவும்  பதவியேற்றுள்ளனர் .  புதிய ஆட்சி மலர்ந்து 10 தினங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் ,  பதவியேற்ற மந்திரிகளுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை .  அத்துடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக இதுவரையில் எந்த அறிவிப்பும் இல்லை . 

அதாவது ஆளும் கட்சிகளுக்கு இடையே இலாகா ஒதுக்கீடு மற்றும் மந்திரிசபை விரிவாக்கம் போன்ற விவகாரங்ளில்  சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது  இந்நிலையில் ஏற்கனவே சிவசேனா பாஜக கூட்டணி தொடர்பாக பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வரும் சிவசேனாவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான மனோகர் ஜோஷி, மீண்டும் சிவ சேனா பாஜக ஒன்று இணையும் என  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார் .இது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.