Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாபில் ஜெயிச்சாலும் ஜெயிச்சாங்க.. திமுகவை வச்சு செய்யும் ஆம்ஆத்மி..

மாற்றுத்திறனாளிகள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது, அவர்களின் போராட்டத்தை தடுக்க தமிழக அரசு விரும்பினால் அல்லது காவல்துறை விரும்பினால் அவர்களை கைது செய்து ஒரு சத்திரத்தில் வைக்கவேண்டும். அதை செய்யாமல் பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி வெளியே வரவிடாமல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் மேலும் அவர்களுக்கு உணவு தேவைகளை பூர்த்தி செய்யாமல் காவல்துறை இருப்பதும் தவறாகும் மனித உரிமை மீரல் ஆகும்.

 

After Punjab Victory .. Aam Aadmi Party to continue attack DMK ..
Author
Chennai, First Published Mar 22, 2022, 11:43 AM IST

ஜனநாயக முறையில் போராட வந்த மாற்று திறனாளிகளை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடைப்பதா? என ஆம்ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மாற்றுத்திறனாளிகளை உடனே விடுவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு அக்கடிச் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி தமிழக அரசுக்கு சாதகமாகவே பேசி வந்த நிலையில் பஞ்சாப் வெற்றிக்கு பின்னர் திமுக அரசை விமர்சிப்பதில் அக்கட்சி குறியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டில் காவல் துறை செயல் பட்ட விதத்தை ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- மாற்றுத்திறனாளிகள் தன்னுடைய உரிமைகளை கூறுவதற்காக தமிழகத்தின் பல பாகங்களில் இருந்து சென்னையை நோக்கி இன்று காலை வந்தார்கள்.அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்ததும் அவரை பேருந்து நிலையத்தில் அவர்களைவெளியேற விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியது காவல் துறை. மாற்றுத்திறனாளிகளை பேருந்து நிலையத்திலேயே அடைத்து வைத்திருப்பது என்பது தவறான அணுகுமுறையாகும்.
இதுவரை தமிழகத்தில் நடந்திராத வழிமுறையாகும்.

After Punjab Victory .. Aam Aadmi Party to continue attack DMK ..

மாற்றுத்திறனாளிகள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது, அவர்களின் போராட்டத்தை தடுக்க தமிழக அரசு விரும்பினால் அல்லது காவல்துறை விரும்பினால் அவர்களை கைது செய்து ஒரு சத்திரத்தில் வைக்கவேண்டும். அதை செய்யாமல் பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி வெளியே வரவிடாமல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் மேலும் அவர்களுக்கு உணவு தேவைகளை பூர்த்தி செய்யாமல் காவல்துறை இருப்பதும் தவறாகும் மனித உரிமை மீரல் ஆகும். ஆகவே தமிழக காவல்துறை ஜனநாயக முறையில் போராட வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவர்களை முறையே கைது செய்து  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

After Punjab Victory .. Aam Aadmi Party to continue attack DMK ..

அதை செய்யாமல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில்  பயணிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில் இந்த நிகழ்வு உள்ளது. தமிழக காவல்துறை  ஜனநாயக உரிமை காத்து மாற்றுத்திறனாளிகளை  போராடுவதற்கு அவர்களின் உரிமைகளை கோருவதற்கும் ஒரு வாய்ப்பை தமிழக  காவல்துறை ஏற்படுத்தித்தர வேண்டும். என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios