Asianet News TamilAsianet News Tamil

தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு.. தமிழன் என்று சொல்வதா.!! ராகுலை டார் டாராக்கிய ஜெயக்குமார்.

திமுகவில் பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும்.  எதிர் வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிபெறும். தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற பல யுக்தியை திமுக கையில் எடுக்கிறது. அதை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, அருகதையில்லை என்றார்.

After killing and amassing Tamils .. do you say Tamil .. !!  Jayakumar Criticized rahul gandhi.
Author
Chennai, First Published Feb 3, 2022, 12:29 PM IST

ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு முகாந்திரம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் திமுகவுட்ன சேர்ந்து தமிழர்கள் கொன்று குவித்துவிட்டு இப்போது நான் தமிழன் என்று பேசினார் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் ராகுல்காந்திக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பி ராகுல் காந்தி மோடி அரசின் நடவடிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் இரண்டு இந்தியா உள்ளது, ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழைகளுக்கான இந்தியா, இந்த இரண்டு இந்தியாக்களுக்கு இடையேயான இடைவெளி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இரண்டு இந்தியாவையும் சமபடுத்துவதற்கான திட்டம் பிரதமர் மோடியிடம் இல்லை என்றார்.

After killing and amassing Tamils .. do you say Tamil .. !!  Jayakumar Criticized rahul gandhi.

இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு இது ராஜ்ஜியம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி பண்பாடு கலாச்சாரம் உள்ளது. பிரதமர் பதவி என்பது ஒரு ராஜாங்கம் அல்ல, மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் மையத்தில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மோடி ஆளநினைக்கிறார். விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லியிலும் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் அது கண்டுகொள்ளப்படவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளது. அதை மத்திய அரசு மதிப்பதே இல்லை. 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அது குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் இல்லை. தமிழ்நாட்டை அடக்கியாள நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும். பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது என ராகுல் ஆவேசமாக பேசினார் பின்னர் நாடாளுமன்ற வளாத்தில் இருந்து வெளியில் வந்த அவரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் தமிழ்நாடு குறித்து அதிகம் உச்சரிக்க என்னகாரணம் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நான் தமிழன் என்று அவர் பதிலளித்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது பலரும் பலவகையல் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறியுள்ளார். 

After killing and amassing Tamils .. do you say Tamil .. !!  Jayakumar Criticized rahul gandhi.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 53 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை. திமுக மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூக நீதி கூட்டமைப்பு என்ற உத்தியை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளனர். 

After killing and amassing Tamils .. do you say Tamil .. !!  Jayakumar Criticized rahul gandhi.

திமுகவில் பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும்.  எதிர் வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிபெறும். தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற பல யுக்தியை திமுக கையில் எடுக்கிறது. அதை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, அருகதையில்லை என்றார். சமூக நீதிக்கு ஆபத்தில்லாமல் அதிமுக பாதுகாத்து வைத்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததோடு அதனை பாதுகாத்தவர் ஜெயலலிதா ஆனால் திமுக அரசு மக்களை நம்பிக்கை மோசடி செய்து வருகிறது. திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு, தமிழன் தமிழன் என்று சொன்னால் தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரம் இல்லை என்றார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios