இரட்டை இலை புரோக்கராக கூறி டெல்லியில் கைதான, சுகேஷ் சந்திரா, ஏற்கனவே, பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர, தினகரன் தமக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறிய சுகேஷ்  சந்திராவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் அளித்த வாக்குமூலம், அவரிடம் இருந்து கைப்பற்ற பணம் ஆகிவற்றின் பேரில், தினகரன் மீதும் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதாகி உள்ள சுகேஷ் சந்திரா, பல்வேறு மோசடிகளில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது.

கேரளா நடிகையும், இவரது காதலியான லீனா பாலுடன் இணைந்து வாங்கி ஒன்றில் போலி ஆவணங்களை கொடுத்து 19 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், லீனா கைது செய்யப்பட்டார். அப்போது சுகேஷ் சந்திரா தப்பி ஓடிவிட்டார்.

மேலும் சுகேஷ் சந்திரா - பாலாஜி, சேகர் ரெட்டி என்ற பல பெயர்களில், பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். இதனால், போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதற்காக, தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளார்.