Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனை.. உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக செலவினப் பார்வையாளர்களுடன் சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  

Advice on monitoring election expenses .. Seizure if money is taken without proper documentation.
Author
Chennai, First Published Mar 9, 2021, 1:55 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக செலவினப் பார்வையாளர்களுடன் சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advice on monitoring election expenses .. Seizure if money is taken without proper documentation.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் செலவின பார்வையாளர்கள் மது மகாஜன், பாலகிருஷ்ணன், ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிகவரித் துறை, துணை ராணுவப் படை, காவல் துறை, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ரொக்கப்பணம் கொண்டு சென்றால், பறிமுதல் செய்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,  மாவட்ட வாரியாக வாகன சோதனைகளை அதிகரிப்பது தொடர்பாகவும்.

Advice on monitoring election expenses .. Seizure if money is taken without proper documentation.

G Pay, Phone Pay போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில்., வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios