விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த ஜுன் மாதம் மரணமடைந்தார். இதையடுத்து அங்கு 21  ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதே போல் நாங்குநேரி தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆகிவிட்டதால் அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளுமே திமுக கூட்டணி தொகுதிகள்.

ஆனால் நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையுமே தற்போது ஸ்டாலின் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்டமான வெற்றி பெறறதால் எப்படியும் இந்த இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்றே ஸ்டாலின் நம்பினார்.

ஆனால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் அதிமுக அடிச்சுத் தூக்கி முன்னிலை பெற்று வருகிறது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவத் தந்துள்ளது.