ஒப்பந்தங்களை அதிமுக எப்போதுமே மீறியது கிடையாது. எனவே, ஒப்பந்தத்தில் என்ன போடப்பட்டதோ அதன்படிதான் நடக்கும் என்றார் ஜெயக்குமார். என்னதான் ராமதாஸ் ஹேப்பியாக இருந்தாலும் நிர்வாகிகளின் எதிர்ப்பால் கதிகலங்கிப் போயுள்ளார் ராமதாஸ்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றது. ஆனால் வாங்கிய ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை அதுமட்டுமல்ல, ஏற்கனவே வைத்திருந்த வாக்கு வங்கியை கூட இழந்துள்ளது. இதனால் மாநில கட்சியின் அந்தஸ்து இழந்துள்ள நிலையில்,  பாமகவுக்கு ராஜ்யசபா சீட் அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவோ ஒப்பந்தம் போட்டதை மீறாமல் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. அனால்,  பாமகவுக்கு வழங்கக்கூடாது என அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் கட்சியின் தலைமையிடம் சொல்லி வந்தனர். நிர்வாகிகளின் தொல்லையால் இதனால் ராஜ்யசபா சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என் குழப்பத்திலேயே இருந்தார் ராமதாஸ். 

இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம்,  அதிமுக - பாமக கூட்டணி உடன்பாட்டின்போது பாமகவுக்கு ஏழு மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக - பாமக கூட்டணி தோல்வியடைந்ததால் பாமகவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கக் கூடாது என்று நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் குரல் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒப்பந்தங்களை அதிமுக எப்போதுமே மீறியது கிடையாது. எனவே, ஒப்பந்தத்தில் என்ன போடப்பட்டதோ அதன்படிதான் நடக்கும் என்றார்.

எது எப்படியோ, அதிமுக தரப்பிலிருந்து ராஜ்யசபா சீட் கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில்,  தர்மபுரியில் தோல்வியடைந்த அன்புமணிக்கு அந்த பதவியை அளிக்கலாம் என்று ராமதாஸ் நினைத்திருப்பதாகவும், தொடர்ந்து அன்புமணிக்கே சீட் கொடுக்காமல், கட்சியில் உள்ள மத்தவங்களையும் கொஞ்சம் கவனிங்க ஐயா, என ராமதாஸிடம் பாமக நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.