Asianet News TamilAsianet News Tamil

விஸ்வரூபமெடுக்கும் மன்னார்குடி குடும்பம்... எதனால் இந்த திடீர் பாய்ச்சல்?

ADMK was controlled in Sasikala family
ADMK was controlled in Sasikala family
Author
First Published Jan 18, 2018, 5:39 PM IST


அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இரண்டு அணிகள் கொண்டாடி வருகின்றனர்.  அ.தி.மு.க-வினர் பல அணிகளாகப் பிரிந்து காணப்படும் நிலை, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளில் கண்கூடாக இப்போது நடந்து வருகின்றது. ஆளும் அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடக்கிறது? இதை சாதாரண மக்களால் சொல்ல முடியும் அப்படி ஒரு பிரேக்கிங் பிரேக்கிங் என ஜெயலலிதா மறைந்ததிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்குப்பின், பன்னீரின் தர்மயுத்தம் செய்தது, எடப்பாடி முதல்வரானது, சசிகலா ஜெயிலுக்கு போனது, இரட்டை இலைக்காக தினகரன் திகார் ஜெயிலுக்குப் போனது, பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக இணைந்தது. பிறகு சசி குடும்பத்தை எதிர்த்தது, தினகரன் இடைதேர்தலில் நின்றது, வெற்றிபெற்றது என இதுவரை இந்த சம்பவத்திற்கு யெல்லாம் மையப்புள்ளியாக இருந்ததே சசிகலா குடும்பம் தான். இப்போது தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றால் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம், பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி கவிழும், 'ஸ்லீப்பர் செல்கள்' வெளியில் வருவார்கள் என இப்போது சவுண்டு விட்டுக்கொண்டிருக்கும் சுயேச்சை MLA தினகரன் இப்படி இப்போது கூறுவது எதற்காக?

ADMK was controlled in Sasikala family

தீயா மாறும் தினகரன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சசிகலா குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ரெய்டின் போது செய்தியாளர்களிடம் கூலாக பேசிய தினகரனோ, "நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல" என சீரிய அவர், சட்ட மன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் தற்போது அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வாசிக்கிறார். அதே போல கடந்த ஆண்டு பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதும், கூவத்தூர் சொகுசு விடுதியில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை தங்க வைத்து தமிழகத்தையே சின்னா பின்னமாக்கியதை ஏன் இன்னும் வாய்திறக்கவில்லை? இப்போ துரோகிகளின் ஆட்சி நடக்கிறது. துரோகிகள் கூட்டு சேர்ந்து நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள். ஆமைத்தலையர், இடிச்சப்புளி என அரசியலை அடுத்த கட்டத்திற்கு செல்லும் நீங்கள் தானே  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமரவைத்தீர்கள்.  அதுமட்டுமல்ல எடப்பாடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் ஊழல் செய்தது உங்களை புறக்கணித்தது வரை உங்கள் குடும்பத்தினருக்கு தெரியாத?

ADMK was controlled in Sasikala family

மழுப்பல் நடராஜன்...

சிகிச்சைக்குப்பின் உடல் நலம் சீராகி வந்துள்ள சசிகலா கணவர் நடராஜன், "எடப்பாடியும், பன்னீர்செல்வமும் எந்தெந்த நாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளனர். என்ற லிஸ்டை போடா முடியும் என தில்லாக கூறுகிறார். போதாததற்கு ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டதில் எந்த தவறுமில்லை. அது ஒரு ஆவணப்படம்" என சமாளிக்கிறார். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்டிக்காத்த ஜெயலலிதா தான், அவர் மீது மரியாதை வைத்துள்ளோம்,  அப்போலோவில் சிகிச்சையின் போது அவர் நைட்டியில் இருந்தார். ஒரு ஸ்டேட்டின் பெரிய பதவியில் இருக்கும் ஜெயலலிதா  மேக்கப் இல்லாமல் இருக்கும் படத்தை எப்படி வெளியிடுவது என சொல்லிவந்தனர். 

ADMK was controlled in Sasikala family

1989-சட்டமன்ற தேர்தல்... ஜெ.அணிக்காக போட்டியிட விரும்புவர்கள் ரூபாய் 20-ஆயிரம் கட்டி விண்ணப்பிக்கலாம்.. சீட்டு கிடைக்காதவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் கட்டிய பணம் திரும்ப தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்தது..தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.

ஜெ.அணிக்கு கடுமையான நிதி நெருக்கடி.சீட் கிடைக்காதவர்களில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவரகள் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர  வேண்டுமென்று நீதி மன்றத்திற்க்கு போனார்கள் .. பிண்ணனியில் இருந்தது கருணாநிதி.

சுமார் 30-  சட்டமன்ற  வென்ற போதும் மானம் கப்பலேரும் சூழ்நிலை. ஆனாலும் சீட் கிடைக்காதவர்களை சமரசப்படுத்தி அவர்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்தது யார்..? இந்த நடராஜன் தானே

அன்னைக்கு பன்னீர் எங்கே இருந்தார்? பழனிச்சாமி என்பவர்  எங்கே இருந்தார்? கே. பி. முனுசாமி எங்கே இருந்தார்? என ஜெயலலிதா இருந்தவரை சொல்லாமல் இப்போது சொல்ல காரணமென்ன?

ஒரு மாநிலத்தின் முதல்வராக, ஒன்றரை கோடி தொண்டர்களின் தலைவியாக இருந்த ஜெயலலிதாவுக்கு  என்ன நேர்ந்தது என்ற கலக்கத்தில், சோகத்தில் 75 நாள்கள் மூழ்கிக் கிடந்தபோது, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டு கூட வெளியிடாமல் இருந்த சசிகலா குடும்பத்தினர், எதற்காக  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, வாக்குப்பதிவுக்கு முதல் நாள், எதற்காக ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவை வெளியிட்டார்கள்? அப்படி என்ன அவசியம்? என  மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

பெருமையை பீத்திக்கொள்ளும் திவாகரன்...

மன்னார்குடியில் தினகரன் அணி சார்பாக நேற்று  நடந்த எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திவாகரன், “ ஜெயலலிதா 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். இந்த தகவலை ஏன் வெளியிடவில்லை என அப்பல்லோ நிர்வாகத்திடம் கேட்டபோது, தமிழகத்தில் எங்களுக்கு ஏராளமான கிளைகள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள். அதன் பின்னர் தகவலை வெளியிடலாம் என பிரதாப் ரெட்டி தெரிவித்தார். மத்திய அரசின் ’கழுகு’ ஒன்றும் மருத்துவமனையில் இருந்தது. முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று அந்த கழுகு திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த கழுகு உயர்ந்த பதவிக்கு போய்விட்டதால் அவரது பெயரை செல்ல கூடாது. ஜெயலலிதா எப்படிதான் இவர்களை நம்பினார் என்று தெரியவில்லை. துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை எப்போதுமே ‘டெல்லி’க்காக வேலை பார்ப்பாரே தவிர தமிழகத்தில் உள்ள அதிமுகவுக்காக வேலை செய்ய மாட்டார். அவருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை. இன்றைக்கு முதல்வராக இருப்பவருக்கும் அன்றைக்கே முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர்களை வைத்து அவரும் முயற்சி செய்துகொண்டிருந்தார். ஜெயலலிதா இருந்த சமயத்தில் பன்னீர் ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் என்பதால் அவரையே முதல்வாராக்கினோம் என இதுவரை சொல்லாமல் இப்போது சொல்ல காரணமென்ன?

ADMK was controlled in Sasikala family

தர்மயுத்தம் தொடங்கும் வரை நல்லாதான் இருந்தார். அவர் எப்போது  டெல்லிக்கு சென்றாரோ அப்போது மிரட்டல்களுக்கு பயந்து அவர் மாறிவிட்டார். எப்போ பார்த்தாலும் காலில் விழுந்து கிடப்பதுதான் அவருக்கு ரொம்ப விருப்பம் எனவும் காலில் விழுந்து கும்புடுவதற்கு பன்னீரிடம்தான் பிஎச்டி வாங்க வேண்டும் என இப்போது சொல்ல காரணம் என்ன? டெல்லியில் இருந்த வந்த பிறகு அமைச்சர்கள் உட்பட எம் எல் ஏக்களின் பட்டியல்களை டெல்லிக்கு தெரிவித்துக்கொண்டே இருந்தார். சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் கூறியவர் பின்னர் தியானம் இருக்க சென்றுவிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். பதவியேற்றதும் என்னிடம் வந்து நான் இன்னொரு ஓபிஎஸாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார் எடப்பாடி. இப்போதுதான் தெரிகிறது அவர் ஓபிஎஸுக்கு மேலாக இருக்கிறார் என்று. ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து ஆர்கேநகரில் மக்கள் முற்று புள்ளியை வைத்து விட்டார்கள் என தங்களுக்கு தானே பெருமையை பீத்திக்கொள்வது எதற்காக? இப்படி பல கேள்விகளை முன்வைக்கபடுகிறது.

ADMK was controlled in Sasikala family

சசிகலா குடும்பத்தில் இருக்கும் இந்த புள்ளிகள் லிஸ்ட் போடுகிறார்களே அவர்கள் யார் தெரியுமா? இவர்கள் எல்லோருமே சசிகலா குடும்பத்தினருக்கு 'கப்பம்' கட்டி சீட் வாங்கியவர்கள் தானே? அதுமட்டுமல்ல, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே சசிகலா குடும்ப சொத்துகளின் மதிப்பு எவ்வளவு? ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, சசிகலா குடும்பத்திற்கு அடிமையாக இருந்தவர்கள்தான் இப்போதுள்ள பெரும்பாலான அமைச்சர்கள். சசிகலா குடும்பத்தினரால் அமைச்சர்களானவர்களைத்தான் இப்போது கட்டம் கட்டுகின்றனர்.

அ.தி.மு.க என்ற மக்கள் இயக்கத்தை, ஜெயலலிதாவை முன்னிறுத்தி சசிகலா குடும்பத்தினர் தங்களின் பிடியில் வைத்திருந்ததை நடராஜனும், தினகரன், திவாகரன் என மன்னார்குடி குடும்பத்தின் தலையாக இருக்கும் இவர்கள் கட்டுப்பாட்டில் தான் அதிமுக என்ற ஒருகழகமே இருந்தது இப்போது அம்பலமாகியுள்ளது.

ADMK was controlled in Sasikala family

தமிழகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை ரசிகர்கள்,  குறைந்த வருவாய் பிரிவினரிடையேயும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஜாம்பவான்கள் பிம்பங்கள், கோலோச்சிய நிலைமாறி, தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அட்டூழியம் புரட்சித்தலைவர் – அம்மா ஆன்மா நிச்சையம் மன்னிக்காது என கூறிவருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios