Asianet News TamilAsianet News Tamil

‘கொம்பு உடைஞ்ச காங்கேயம் காளை’... தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளரை கிழித்து தொங்கவிட்ட விந்தியா... வீடியோ!

எஸ்.பி.வேலுமணியையும், கார்த்திகேய சேனாதிபதியையும் ஒப்பீடு செய்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

ADMK Vindhya slams DMK Candidate karthikeya sivasenapathy  who oppose to SP Velumani video going viral
Author
Chennai, First Published Mar 23, 2021, 11:30 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என இம்முறை ஐந்துமுனை போட்டி நிலவுவதால் தீவிர ஓட்டு வேட்டை நடைபெற்று வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்கள், கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளால் ஆதரவு அலை வீசி வருகிறது. 

ADMK Vindhya slams DMK Candidate karthikeya sivasenapathy  who oppose to SP Velumani video going viral

குறிப்பாக தொண்டாமுத்தூர்  தொகுதியில் 3வது முறையாக களமிறங்கும் அதிமுக உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை அவரை எதிர்த்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். கார்த்திகேய சிவசேனாதிபதியின் வருகை கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என திமுக மலைபோல் நம்பியுள்ளது. 

ADMK Vindhya slams DMK Candidate karthikeya sivasenapathy  who oppose to SP Velumani video going viral

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியையும், கார்த்திகேய சேனாதிபதியையும் ஒப்பீடு செய்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “நம் அண்ணன் எஸ்.பி.வேலுமணி உடைய 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கட்டக்காளை, மயிலைக் காளை, கத்தி கொம்பம், இரட்டைக் கொம்பன் என பல காளைகளை அடக்கியுள்ளார். இந்த கார்த்திகேய சிவசேனாதிபதி என்கிற கொம்பு உடைஞ்ச காங்கேயம் காளையை எஸ்.பி.வேலுமணி அடக்க எல்லாம் தேவையில்லை, சும்மா வழியில் வந்து நின்னு மிரட்டினாலே பேசும் மல்லாந்துவிடும். ஏன் என்றால் அது காளை உருவத்தில் இருக்குற கன்னுக்குட்டி, கத்துக்குட்டி. இந்த சிவசேனாதிபதி மாட்டை வச்சி ஏமாத்திக்கிட்டு இருக்குறாரு. இந்துக்கள் எல்லாம் திருடன்னு சொன்ன கருணாநிதி கட்சியோட கூட்டணி வச்சிக்கிட்டு, இவர் காங்கேயத்தில் காளை மாடுகளை வளர்த்து காப்பாற்றுவதாக சொல்கிறார்  என சகட்டுமேனிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்... இதோ அந்த வீடியோ... 

Follow Us:
Download App:
  • android
  • ios