admk urgent meeting today to discuss about defet of r.k.nagar elections
சென்னை ஆா்.கே. நகா் தொததி இடைத் தோ்தலில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் அவரச ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது டிடிவி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக இருந்தனர். ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தார். ஆனால் வாக்காளர்களுக்கு எணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
.jpg)
இந்நிலையில் ஆர்,கே.நகருக்கு மீண்டும் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இப்போது ஓபிஎஸ் –இபிஎஸ் அணிகள் இணைந்து, டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார். அதே நேரத்தில் கட்சி மற்றம் இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் கைகளுக்குப் போனது.

இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.
இதனிடையே நேற்று வெளியான ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் முடிவுகள் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஏனெனில் சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன் தொகுதியின் ஒட்டுமொத்த வாக்குகளில் 50.5 சதவீதம் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
.jpg)
கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றபோது வாங்கிய ஓட்டுக்களைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், அவசர ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்..
இன்றைய கூட்டத்தில் மதுசூதனனின் தோல்வி, எதிர்காலத்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
