அமமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, நேற்று பிரமாண்ட இணைப்பு விழா நடத்தி அதில் தனது பலத்தைக் காட்டினார். அமமுகவில் இருந்து தொண்டர்களை இழுத்து திமுகவில் இணைப்பார் என்று கணக்குப் போட்டு வைத்திருந்த எடப்பாடியாருக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டில் ஷாக் நியூஸ் காத்திருந்ததாம்.

கரூரில் மிக பிரமாண்ட இணைப்பு விழாவில் மாற்றுக்கட்சியில் இருந்து 25 ஆயிரம் தனது தலைமையில் கட்சியில் இணைவார்கள் என வாக்குறுதி கொடுத்திருந்தாராம் செந்தில் பாலாஜி. ஆனால் அதையும் தாண்டி 30 ஆயிரத்து 425 பேரை சேர்த்து அசத்தி இருக்கிறார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆளும் அரசு அதிர்ந்துப் போய் கிடைக்கிறதாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நிறைய செலவு செய்த செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து ஆதரவாளர்களை திமுகவில் இணைப்பார் எனப் பார்த்தால், அவர் கைவைத்ததே அதிமுகவில் தானாம். சுமார் 20,000 பேர் வரை அலேக்காக தூக்கியிருக்கிறார்.

இந்நிலையில் உளவுத்துறையினர் நேற்று நடந்த இந்த மெகா கூட்டத்தை அப்படியே ஸ்கேன் செய்து கொடுத்துள்ளனர். ரிப்போர்ட்டை பார்த்த மாநில மத்திய அரசுக்கு பயங்கர ஷாக் திமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதை கண்கூடாக பார்க்க முடிவதாக இருந்த்ததாம் அந்த ரிப்போர்ட். அதுமட்டுமல்ல மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் இருந்து இணையும் விழாவில் 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் திமுகவுக்கு பலம் மட்டும் அல்ல ஆளும் அரசை அதிரவிட்டுள்ளார் செந்தில் பாலாஜி.

மிக பிரமாண்ட மேடை அமைத்து, கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கூட்டி தனி ஒருவனாக திமுக இணைப்பு விழாவில் தனது பலத்தை காட்டியதால் அலண்டுபோய்க் கிடைக்கிறதாம் அதிமுக வட்டாரம்.