தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 3 திமுகவுக்கும், 3 அதிமுகவுக்கும்  கிடைக்க உள்ளன,

திமுகவைப் பொருத்தவரை  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு சீட்டும் ஒரு சீட் தொமுச சண்முகத்திற்கும் ஒரு சீட் வழக்கறிஞர் வில்சனுக்கும்  வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக தனக்கு உள்ள 3 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு கொடுக்கிறது. மீதமுள்ள இரண்டு இடங்களில் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தம்பிதுரைக்கு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி சிபாரிசு செய்துள்ளார்.

மற்றொன்றை  கே.பி.முனுசாமிக்கு வழங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் சிபாரிசு செய்துள்ளார். அதே நேரத்தில் மைத்ரேயனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். 

ராஜ்யசபா பதவிக்கு கட்சிக்குள்ளும், டெல்லி மேலிடத்தில் இருந்தும் நெருக்கடி கொடுப்பதால் யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் உள்ளது அதிமுக தலைமை. 

இறுதியாக முனுசாமி அல்லது மைத்ரேயனுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.