அது எந்த அமைச்சர் என்று சொல்ல மாட்டோம். விபரமறிந்தோர் புன்னகைத்துக் கொள்ளுங்கள், விபரம் புரியாதோர்  உதட்டைப் பிதுக்கிக் கொள்ளுங்கள். 

ஜெயலலிதாவின் ஆட்சிகாலம் அது. தெளிவான உடல் நலத்துடனும், துள்ளலான மக்கள் செல்வாக்குடனும் பெண் சிங்கம் போல் ஜெ., ஆண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவரது அமைச்சரவையிலிருந்த சீனியர் மோஸ்ட் மாண்புமிகுவின் குடும்பமொன்று ஜெ.,வை சந்தித்தது. இந்த சந்திப்பானது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியாமல் ரகசியமாய் வைக்கப்பட்டதுதான் ஹைலைட். சிங்கத்தின் முன் நின்ற குடும்பம் தங்கள் குடும்ப தலைவரை பற்றி ஒரு ஏடாகூடமான விஷயத்தை சொல்லி கண்ணீர் வடித்தது. ஜெயலலிதாவுக்கு பிரஷர் ஏறி, சிவந்த கன்னங்கள் செக்கச் சிவந்தன. 

அடுத்த நொடி உளவுத்துறை போலீஸுக்கு உத்தரவு போட்டார், அடுத்த சில மணி நேரங்களிலேயே ‘யெஸ் மேடம், அந்த தகவல் உண்மைதான்’ என்று ரிப்போர்ட் வைக்கப்பட்டது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த சீனியர் அமைச்சரோ, குப்பை போல் கசக்கி வீசப்பட்டார் அ.தி.மு.க.விலிருந்து. 

ஜெயலலிதா, வேறு எந்த மாதிரியான புகாராக இருந்தாலும் கூட மன்னித்துவிடுவார். ஆனால் ‘பெண் விஷயம்’ என்றால் ஆண் அமைச்சர்களுக்கு விழும் அடி அரசியலில் கிட்டத்தட்ட மரண அடியாக இருக்கும். அப்பேர்ப்பட்ட ஆளுமையான ஜெ., மறைந்த பிறகு அந்த கட்சி என்னவெல்லாமோ அசிங்கங்களை அனுபவித்துவிட்டது. அதில் இப்போது வெளிப்பட்டிருக்கும் விவகாரம் அய்யய்ய்ய்யே ரகமானது.  

மதுரை ஆவின் அண்ணா தொழிற்சங்க தலைவரான பாண்டி மற்றும் ஆவின் மாநில அண்ணா தொழிற்சங்கத் தலைவரான பரமன் ஆகியோர் சில வீடியோக்களில் சிக்கியுள்ளனர். அதாவது ஆவினில் பணி புரியும் பெண்களை இவர்கள் ‘நிரந்தரமாக்குறேன், ஊதிய உயர்வு தர்றேன்’ என்று சொல்லி ஆசை காட்டியும், மடியாத பெண்களை ‘வேலையை விட்டு தூக்கிடுவோம், மெமோ கொடுத்துடுவோம், கன்ஃபார்ம் பண்ணமாட்டோம்.’ என்று மிரட்டியும் தங்கள் செக்ஸ் ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்களாம். அதவும் எப்பவோ, எப்போதோ என்றில்லாமல் கிட்டத்தட்ட தினம் தினம் நடந்திருக்கிறது இந்த் சல்லாப திருவிழா. 

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் தங்களுக்கு வேண்டப்பட்ட, அதே ஆவினில் பணிபுரியும் ஆண்களிடம் முறையிட்டுள்ளனர். அவர்களோ, மேற்படி சம்பவங்களுக்காக நிர்வாகிகள் இருவரும் பயன்படுத்தும் ஸ்பெஷல் வீட்டினுள் கேமெராவை மறைத்து வைத்து இந்த பலான காட்சிகளை இன்ச் பை இன்ச் வீடியோவாக்கிவிட்டனர். இப்போது இந்த விவகாரத்தால் பெயர் நாசமாகிக் கிடக்கிறது மதுரை ஆவின். 

இந்த பஞ்சாயத்து பற்றி சற்றே விரிவாய் பேசும் மதுரை ஆவின் ஊழியர்கள் சிலர் “மதுர அவனியாபுரத்துல பாண்டியும், பரமனும் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வெச்சிருக்காய்ங்கண்ணே. இதுதான் இவிய்ங்களுக்கு அந்தப்புரமே. மதுர ஆவின்ல நானூத்து சில்லர ஊழியருங்க வேல பார்க்கிறாய்ங்க. இதுல பாதிக்கும் மேலே பொம்பளைங்கதான். 

இந்தப் புள்ளைங்களை மிரட்டியோ, அல்லது ஆச காட்டியோ கவுத்திடுறாய்ங்க. அதிலேயும் காண்ட்ராக்ட் வேலைக்கு பொண்ணுங்களை சேர்க்கிறப்பவே தங்களுக்கு தோதா இருப்பாய்ங்களான்னு பார்த்துட்டும், உருவத்தை பார்த்துட்டும்தான் சேக்குறாய்ங்க. அப்புறம் தந்தனதாம் தந்தனம்தாம்ணே....

இவிய்ங்க ரெண்டு பேரோட வீக்னஸை வெச்சு வெகு சில பொண்ணுங்க வகையா சம்பாதிச்சிடுச்சுங்க. ஆனா பல பொண்ணுங்க பாவம் சீரழிஞ்சிடுச்சு. மதுரய சேர்ந்த ஒரு ஏழை பொண்ணு, பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஏழ குடும்பம், கவர்மெண்டு வேலைக்காக படிக்குது. ஆனா வீட்டு செலவுக்காக பார்ட் டைமா இங்கே வேலைக்கு வந்துச்சு. அந்தப் புள்ளைய இவிய்ங்க பயங்காட்டி சீரழிச்சது மட்டுமில்லாம, சென்னைக்கு அனுப்பி மேலிடம் வரைக்கும் கவனிச்சுட்டாய்ங்க. 

மதுர இளம் மல்லி சென்னைக்கு வந்ததை கேள்விப்பட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும்  கசக்கி முகர்ந்துட்டாய்ங்க. இப்போ அந்தப் புள்ள, ஆவினை விட்டே கண்ணீர் வழிய ஓடிடுச்சு. இப்டியிருக்குதுண்ணே இவிய்ங்க ஆட்டம்.” என்றார். வீடியோ வெளியான பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு நபர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நேர்மையான தொடர் விசாரணையும், வீடியோ எடுத்த நபர்களிடம் இன்னும் நோண்டிப் பார்த்தால் ஏகப்பட்ட பெண்களை இவர்கள் சீரழித்த கதைகள் வெளியே வரும் என்கிறார்கள். 

ஆனால் பாண்டியும், பரமனுமோ ‘வீடியோவில் உள்ள எந்தப் பொண்ணுமே புகார் கொடுக்கலை. ஆக இது ஒரு செட் அப் வீடியோ. எங்களோட அரசியல் எதிரிகளின் கைங்கர்யம் இது.” என்று மறுத்திருக்கிறார்கள். மதரயிலேயே பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னா எப்பூடி?