எடப்பாடியார் கோடு போட்டார், ஸ்டாலின் அதில் ரோடே போட்டுட்டார்:  வடை போச்சே!? என வாடும் அ.தி.மு.க!

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட இந்த அளவுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினுள் முட்டல் மோதல் காயங்கள் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக இரண்டு கட்சிகளும் சாதாரண ஒரு வரி ட்விட்டரில் செய்தியில் ஆரம்பித்து பக்கம் பக்கமான அரசியல் வரலாறு வரை தாறுமாறாக மோதிக் கொள்கின்றனர். 

அதிலும் ஸ்டாலினும், எடப்பாடியாரும் ஒருவரை ஒருவர் தூக்கி சாப்பிட முயலும் விஷயங்கள்தான் செம்ம அரசியல் ஹாட்டாக இருக்கின்றன. ஸ்டாலின் சொல்லும் விஷயத்தை வைத்தே அவரை மடக்கிட எடப்பாடியார் முயல்வதும், எடப்பாடியார் வெளியிடும் அறிவிப்பை வைத்தே அவரை நொறுக்கிட ஸ்டாலின் முயல்வதுமாக தெறிக்க விடுகின்றனர் போட்டி அரசியலை. 

அதிலும், ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டு, மக்களிடம் யார் நல்ல பெயர் எடுப்பது? என்பதில் இருவருக்குள்ளும் நடக்கும் போட்டியாது ஃபார்மூலா 1 ரேஸ்களை விட மிக மிக அசுரத்தனமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்களே பேசுகின்றனர். அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றனர். 

அதாவது பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களாக கருதப்படுகின்றனர். இந்த மக்களுக்கு வரும் தை திருநாளுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் சர்க்கரை பொங்கல் செய்வதற்கான பொருட்கள், பொங்கல் பரிசு வழங்கப்படும்! என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் சர்க்கரை கார்டு வைத்துள்ள நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு அரசாங்கத்தின் மீது ஒரு கடுப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டையில் விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சியில் நைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டது. அது போல, எல்லா கார்டுதாரர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.’ என்று பேசியிருக்கிறார். 

இதனால் பொங்கல் பரிசு கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்த மக்களுக்கு ஸ்டாலின், தி.மு.க.மீது ஒரு அணுசரனை ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் உளவுத்துறை வழியே அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை எட்டிட, ‘ அடச்சே! மிஸ் பண்ணிட்டோமே  நல்ல வாய்ப்பை. ஆக்சுவலா முதல்ல அரிசி அட்டைகளுக்கு மட்டும் பரிசு தொகுப்பு தர்றதா சொல்லிட்டு அப்புறமா எல்லாருக்குமே வழங்குற ஐடியாலதான் முதல்வர் எடப்பாடியார் இருந்தார். 

கொஞ்சம் டைம் விட்டு அதை பண்ணிக்கலாமேன்னு நினைச்சோம், ஆனால் ஸ்டாலின் இப்படி சட்டுன்னு முந்திட்டார். வடை போச்சே! இனி நாங்கள் அந்த முடிவை எடுத்தாலும் ‘ஸ்டாலின் தான் நமக்காக பேசி வாங்கிக் கொடுத்திருக்கார்!’ன்னு மக்கள் பேசுவாங்களே!’ என்று நோகின்றனர். மிஸ் பண்ணிட்டீங்களே  மிஸ்டர் இ.பி.எஸ்!

-    விஷ்ணுப்ரியா