அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பொது செயலாளர தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுக்க வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் அவரது வழக்கறிஞர் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுக தொண்டர்கள் என சொல்லப்படுபவர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சசிகலாவின் கணவர் திலகரின் மூக்கு உடைந்து உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.பின்னர் போலீசார் வந்து சாவகசமாக் கூட்டி சென்றனர்.

இது குறித்து தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அதிமுக தொலைகாட்சி பிரபலம் ஆவடி குமார், "சசிகலா புஷ்பா தலைமை அலுவலகத்துக்கு வந்தால் அப்படிதான் தாக்குவோம்" என அசால்டாக பதில் கூறினார்.

மேலும் தலைமையின் அனுமதி இல்லாமல் எப்படி அவர்கள் அதிமுக அலுவலகத்துக்கு வரலாம்? என ஆவடி குமார் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிர்ப்பே இல்லை என்ற நிலையில் தன்னுடைய பெயரை கொண்ட சசிகலா புஷ்பாவால் தலைவலி ஆரம்பித்து விட்டது.