கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அதிமுக 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், தேமுதிக 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும்போட்டியிட்டன.

அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு நேர் காணல் நடைபெற்றது. இதில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ வி.கே.சி.சின்னுசாமி, விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற நேர்காணலிலும் அவர் பங்கேற்றார். ஆனால் அவருககு சிட் வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம்.ஆனந்தனுக்கு சிட் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  முன்னாள் எம்எல்ஏ வி.கே.சி.சின்னுசாமியிடம் அவரது உறவினர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா ?  என கேட்கிறார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் எம்எல்ஏ வி.கே.சி.சின்னுசாமி, எம்.பி.தேர்தலில் போட்டியிட அதிமுக மேலிடம் 10 கோடி ரூபாய் கேட்பதாகவும், தேர்லின்போது ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால் போடியிலிருந்து விலகிக் கொண்டு சொந்த ஊர் திரும்பி விட்டதாகவும் தனது உறவினரிடம் முன்னாள் எம்எல்ஏ வி.கே.சி.சின்னுசாமி தெரிவிக்கிறார்.

இந்த ஆடியோ இத்தனை  நாட்கள்  கழித்து வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.