2007 முதல் கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலம் எனது குடும்ப உறுப்பினர் போல் நான் மிகவும் நேசித்த வண்டி இந்த அம்பாசிடர் கார். லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக ஓடிய வண்டி. பாராளுமன்றம், விமான நிலையம், பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை, நார்த் பிளாக், சவுத் பிளாக், பல்வேறு கட்சித் தலைவர்கள் இல்லம், தர்மயுத்த நாட்கள் என்று பரபரப்பாக ஓடிய இந்த அம்பாசிடர் கார் இப்போது ஓய்வெடுக்க உள்ளது. 

ஜூலை 24-ம் தேதியுடன் எம்.பி. பதவி முடிவடைய உள்ள நிலையில் ‘ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’என்ற பாடலின் வரிகளைப் போட்டு முகநூலில் பதிவு செய்துள்ளார் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.
அதிமுக எம்.பி.யாக 3 முறை தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் மைத்ரேயன். பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு வந்த இவருக்கு 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை அல்லது மத்திய சென்னையில் போட்டியிட விரும்பிய அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மேலும் 4-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். கடைசியில் அதுவும் நடக்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்நிலையில் தன்னுடைய ராசியான அம்பாசிடர் கார் கயலான் கடைக்கு செல்ல உள்ளதைப் பற்றியும் எம்.பி. பதவி நிறைவு பெற உள்ளதையும் குறிப்பிட்டு முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் நிலைத்தகவல் பதிவிட்டுள்ளார். அதில், “2007-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானபோது அம்பாசிடர் கார் வாங்கினேன். அதற்கு முன்பு எஸ். எஸ். சந்திரன் 2002-ல் வாங்கி, அவரது பதவிக்காலம் 2007 ஜூலையில் முடிவுற்ற பின்னர் அவரிடம் இருந்து நான் வாங்கினேன். 2002 - 07 வரை இந்த வண்டி 28000 கி. மீ. ஓடியது. டீசல் வண்டி என்பதால் டெல்லி மாநகர போக்குவரத்து விதிப்படி 15 ஆண்டுகளுக்கு மேல் டீசல் வண்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். எனவே சென்ற ஆண்டு ஹூண்டாய் அக்சென்ட் கார் வாங்கினேன்.