ADMK MLA s with Ministers

’வாழ்க்கை ஒரு வட்டம்டா. இதுல கீழே இருக்கிறவன் மேலே வருவான், மேலே இருக்கிறவன் கீழே போவான்’_ அப்படின்னு அன்னைக்கே தளபதி பேசுன கில்லி டயலாக் இன்னைக்கு செமத்தியா பொருந்துறது எடப்பாடி அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ_க்களுக்குத்தான். 

ஒரு காலத்தில் அமைச்சர்களையும், மாவட்ட செயலாளர்களையும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்னைக்கு அவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாச்சும் உர்,புர்_ன்னு அமைச்சர்கள் தங்களை பார்த்து உருமினால் போதும் உடனே சுருக்கென்று கோபம் வந்துவிடுகிறதாம். இமீடியெட்டாக போனை போட்டு ’என்னமோ திட்டுனீங்களாமே! சரி, சரி எனக்கொன்னும் பிரச்னையில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு போயிடுறேன்.

உங்ககிட்ட பாட்டு வாங்கி கட்டிட்டு இருக்க வேண்டிய அவசியமேயில்லை. எனக்கு பதவி, பணத்தை விட தன்மானம்தான் பெருசு. நானும் போயி, இன்னும் நாலு எம்.எல்.ஏ.க்களையும் கூட்டிட்டு போயிட்டேன்னா அப்புறம் உங்களோட ஆட்சி கிழிஞ்சுது லம்பாடி லுங்கி கதைதான்.” என்று இவர்கள் விடுக்கும் டயலாக்குகளை காதில் ரத்தம் தெறிக்க தெறிக்க வேறு வழியே இல்லாமல் கேட்டுவிட்டு, ‘தம்பி, நான் உங்களை திட்டுனதையெல்லாம் நீங்க உண்மைன்னு நினைச்சுட்டீங்க,

அய்யோ, அய்யோ!”ன்னு கட்டப்பொம்மு வடிவேலாக சமாதான தூது அனுப்பி துவம்சமாகிறார்கள் அமைச்சர்கள். 
சிம்பிளாக சொல்வதென்றால் அமைச்சர்களின் நிலை கட்டப்பொம்மு ரேஞ்சுக்கு இறங்கிவிட்டது. 
கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களுக்கும் இந்த நிலை இருந்தாலும் கூட ஓவராக டார்ச்சராவது வெகு சில அமைச்சர்களே.

அதில் குறிப்பாக லோக்கல் பாடி மாண்புமிகுதான் அநியாயத்துக்கு தன் மாவட்டத்தில் வறுபடுகிறாராம். இவருக்கு கனவிலும் கூட வந்து ‘நான் அங்கிட்டு தாவிடுவேன், அங்கிட்டு தாவிடுவேன்.’ அப்படின்னு டார்ச்சர் கொடுப்பது தனது தொகுதிக்குள்ளேயே விமானபடை தளத்தையே வெச்சிருக்கும் கனகான எம்.எல்.ஏ.தான்.
அவ்வ்வ்!...