ADMK Ministers are ready for internal squad conflict
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை போட்டுக் கொண்டிருக்கும் ‘டாக்ஸ் ஊசி’ போதாதென்று, முதல்வர் எடப்பாடியாரும் தன் பங்குக்கு ‘அவாய்டு ஊசி’ போடுவதாக தமிழக அமைசரவையில் இன்று செம ஹாட் டாக்!
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு பிறகு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை லீஸுக்கு எடுத்து வருமான வரித்துறையினர் நாட்கணக்கில் ரெய்டு நடத்திய விவகாரம் ஊரறிந்தது. அவருக்கு சப்போர்ட் செய்யப்போகிறேன் பேர்வழிய் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் விஜய்யின் பங்களாவுக்குள் போய் நின்று சவுண்டு விட்டது உலகமறிந்த மகா அசிங்கம்.
ரெய்டு முடிந்தாலும் ‘கொஸ்டீன் ஹவர்ஸ்’ என்று சொல்லி விஜயபாஸ்கரின் மொத்த குடும்பத்தையும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து முறைவாசல் செய்யச் சொன்ன விவகாரம், ‘எங்க வூட்டுக்கார மினிஸ்டராக்கும்!’ என்று சீன் போட்ட பல மாண்புமிகுக்களின் வூட்டம்மாவுக்கு வயிற்றில் கிரைண்டரை ஓட்டியது நினைவிருக்கலாம்.
.jpg)
இம்மாம் கூத்து நடந்து, எதிர்கட்சியினர் ‘முறைகேடில் சிக்கிய விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்று!’ என்று தினமும் கூவிய பிறகும் எடப்பாடி அவரை ‘எடுப்பேனா?’ என்று அடம் பிடிக்கிறார். அப்படின்னா முதல்வர் பழனிச்சாமி, விஜயபாஸ்கருக்கு அம்புட்டு ஆதரவா? என்று வெள்ளந்தியாக நினைத்துக் கொண்டிருந்தது தமிழகம்.
ஆனால் கட்சி இப்போது இருக்கும் சூழ்நிலையில், அமைச்சரை என்ன ஒரு கிளை செயலாளரை கூட மாற்றும் சூழ்நிலையில் எடப்பாடி இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. பார்ட்டியின் பல்ஸை பக்காவாக கணித்து வைத்திருப்பதால் விஜயபாஸ்கரும் குஷியாகவே இருக்கிறார்.
.gif)
இந்நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் காதொலி கருவி வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டார். துறை அமைச்சர் என்ற ரீதியில் விஜயபாஸ்கரும் கலந்து நின்றார். விழா மற்றும் வழங்கப்படும் உபகரணம் பற்றி சில விஷயங்களை அமைச்சர் விளக்க அதை ஃபார்மலாக எடப்பாடி கேட்டுக்கொண்டார். ஆனால் உளார்ந்து விஜயபாஸ்கரை அவர் கவனிக்கவே இல்லை, அவரிடம் உரையாடல் கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் விழா முடியும் வரை அமைச்சரை முதல்வர் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை.
இந்த புறக்கணிப்பு வெளிப்படையாகவே இருந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ந்தனர். இங்கே நடக்கும் விஷயங்கள் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான, கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு ஆகாத அமைச்சர்களுக்கு லைவ்வாகவே ரிலே செய்யப்பட்டது. விழா முடிந்ததும் விஜயபாஸ்கருக்கு போன் செய்த ஒரு அமைச்சர் ‘ஃபீல் பண்ணாத விஜய். இப்ப இருக்கிற சூழ்நிலையில ஒவ்வொரு தொண்டனும் முக்கியம். அமைச்சர் உன்னை இழந்துடவோ, விலக்கிடவோ முடியுமா? மேற்கு வாழ்ந்து தெற்கு தேயுற புது அரசியல் நம்ம அணியில இப்ப ஓடிட்டு இருக்குது. கூடிய சீக்கிரம் இது மாறும்.” என்று தனது துறை அதிகாரிகள் பலர் முன்பாகவே பேசியிருக்கிறார். மறுமுனையில் விஜய்யும் இதைக்கேட்டு உற்சாகமாகியிருக்கிறார்.
.jpg)
எடப்பாடி அணியை தினகரன் டார்கெட் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். கூடிய விரைவில் எடப்பாடி அணியில் அவர்களுக்குள்ளாகவே கலகம் பிறந்தாலும், அதனால் அணி பிளந்தாலும் ஆச்சரியமில்லை என்பதே இப்போதைய நிலை. தென்னக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஏதோ ஒன்றுக்கு தயாராவது நன்றாக புரிகிறது என்கிறார்கள் சீனியர் அதிகாரிகள். சட்டமன்றம் நடக்கும்போதோ அல்லது தினகரன் அணியினரால் ஆட்சியில் ஏற்படும் அசைவுகளை அடிப்படையாக வைத்தோ தென்னக அமைச்சர்களின் மூவ் இருக்கும் போல தெரிகிறது.
இனி செய்தி சேனல்களில் பிரேக்கிங், பிக் பிரேக்கிங், பிக்கஸ்டு பிரேக்கிங்தான்!
