நடிகர் ரஜினிக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அவர்கள் சென்று விடுவார்கள். ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள்” என்று ஈஸ்வரன் தெரிவித்தார். 

ரஜினி கட்சி தொடங்கினால், அதில் சேர அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். பின்னர் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “அதிமுக அமைச்சர்கள் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்காகக் காத்திருப்பதாக” தெரிவித்தார். 


போட்டி தேர்வுகள் தமிழகத்தில் முறையாக நடைபெறவில்லை என்பதை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு மூலம் தெரியவந்துள்ளது. ஏழை- எளிய மாணவர்களுக்கு படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. ஈரோடு மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால், அமைச்சர்கள் இதை கிண்டலடித்து பேசுகிறார்கள். நடிகர் ரஜினிக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அவர்கள் சென்று விடுவார்கள். ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள்” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.