அமெரிக்காவில் "தங்க தமிழ்ச்செல்வன்" விருது வாங்கியவர் ஓபிஎஸ் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  தவறுதலாக கூறியது மேடையில் இருந்தவர்களை சிரிக்க வைப்பதாக இருந்தது  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை திறந்து வைத்தார்.  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குத்துவிளக்கு  ஏற்றி வைத்தார்,   பின்னர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ,  ஊரக வளர்ச்சி துறை,  தோட்டக்கலைத் துறை,  வேளாண் துறை ,  உள்ளிட்ட பல்வேறு துறை சார்பாக 551 பயனாளிகளுக்கு 

3.81 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்கினார் . அவ்விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நான்கு கண்கள் ஆனால் அவர்களின் பார்வை ஒன்று தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் .  அத்துடன் தேனியில் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி,  மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமையவேண்டும் என்பதற்காக  துணை முதலமைச்சர் முயற்சிகள் எடுத்து வருகிறார் என்றார் .  ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டிப் பேசிய அவர்,  அமெரிக்காவில் "தங்க தமிழ்ச்செல்வன்'' விருது வாங்கியவர் ஓபிஎஸ் என தவறுதலாக கூறினார். அதைக்கேட்டு மேடையிலிருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். 

ஆனால் பின்பு சுதாரித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் , தங்க தமிழ் மகன் விருதுபெற்ற ஓபிஎஸ் எனக்கூறி விட்டு, தங்கதமிழ்ச்செல்வனும் நம்ம ஆளுதான் பரவாயில்லை என்றார்.  உள்ளாட்சித்  தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தினால் தான் ஸ்டாலின் தேர்தலை நிறுத்த வழக்கு தொடுத்துள்ளார்,  ஆனால் முதல்வர் அதை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் என்றார்.