முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முக்கிய முடிவு எடுப்பதற்காக கூட்டப்படும் முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸில் கடந்த சில வருடங்களாகவே அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு வழக்கம்போல பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பு போல் அனுமதி அளிக்கப்பட்ட செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்கு நேரடியாக வராமல் ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூட வேண்டும்.

அங்கிருந்து தனி தனியாக வால்வோ பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர்.

7 முறை அதிமுக பொதுசெயலாளராக இருந்து வந்துள்ளார் ஜெயலலிதா. அந்த பதவிக்கு ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் முக்கிய நிகழ்வுதான் இன்று நடைபெற உள்ளது.

நேற்று சசிகலா புஷ்பாவின் ஆதாரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றதால் அங்கு அடிதடி, கைகலப்பு ஏற்பட்டது.

அதனை மனதில் கொண்டு இன்று எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

அந்த வகையில் வால்வோ பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவர் கையிலும் தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.

அந்த கடிதத்தை ஒன்றுக்கு இரண்டு பேர் சரிபார்த்த பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

அதிமுகவில் ஜெ. இல்லாமல் நடைபெறும் முதல பொதுக்குழு கூட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் பொதுக்குழு நடத்தபடுகிறது.