சசிகலாவுடன் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் இன்று போயஸ் தோட்டத்தில் திடீர் ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைந்து 3 நாட்கள் ஆன நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர் ஆதிமுக நிர்வாகிகள்.

ஜெயலலிதா வகித்து வந்த பொது செயலாளர் பதவியை அலங்கரிக்க போவது யார் என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகள் வெளி வந்தாலும், அவர் தலைமையில் தான் கட்சி இயங்குகிறதுஎன்பதில் பல தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஜெயலலிதவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா தலைமையில், தற்போதைய முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்மணி, வேலுமணி ஆகியோருடன் புதிதாக கே.சி.வீரமணியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் அடுத்து என்ன செய்வது, அடுத்த கட்ட முக்கியமான நடவடிக்கை என்ன என்பது குறித்து சிசிகலா விவரித்ததாக கூறப்படுகிறது.