காங்கிரஸ் – பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க தெலங்கானா முதலமைச்சர் சநதிரசேகரராவ் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் , அந்த அணிக்குள் அதிமுகவை கொண்டுவர அவர் தனது எம்.பி.க்கள் மூலம் அதிமுக எம்பிக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பே சென்னை வந்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ். கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் தேர்தலில் பிஸியாகிவிட்டார். அதேநேரத்தில் காங்கிரஸ் – திமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் ஜெயித்து மீண்டும் தெலங்கானாவின் முதலமைச்சரான சந்திரசேகர ராவ் தற்போது மீண்டும் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இதற்காக, அவர் பல்வேறுமாநிலங்களைச்சேர்ந்த, முக்கியதலைவர்களைசந்தித்து, பேச்சுநடத்திவருகிறார். இதன் முதல் கட்டமாக ஒடிசாமுதலமைச்சர் நவீன்பட்நாயக், மேற்குவங்கமுதலமைச்சர் மம்தாபானர்ஜிஆகியோரை, தெலுங்கானாமுதலமைச்சர் சந்திரசேகரராவ், சந்தித்து மூன்றாவது அணி குறித்து ஆலோசனை நடத்தினார். வரும் 6 ஆம் தேதி சந்திரவேகர ராவ், அகிலேஷ் யாதவை சந்தித்த்துப் பேச உள்ளார்.

அடுத்தகட்டமாக, பகுஜன்சமாஜ்கட்சிதலைவர், மாயாவதியைசந்தித்துபேசவும், சந்திரசேகரராவ்திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்நிலையில்தான் அ.தி.மு..,வை, மூன்றாவதுஅணியில்இடம்பெறச்செய்வதற்கானமுயற்சியில், தெலுங்கானாமுதலமைச்சர் சந்திரசேகரராவ்இறங்கியுள்ளார் என தெரிகிறது.

இது குறித்து இபிஎஸ் -ஓபிஎஸ் என இருவரையும் சந்தித்துப்பேச, தனது எம்.பி.,க்கள்வழியாக, துாதுஅனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தகூட்டணியால், பெரியஅளவில்சாதிக்கமுடியும்என்றும், அவர்கணக்குபோடுகிறார்.

ஏறகனவே பாஜக - .தி.மு.., இடையே, கூட்டணிபேச்சுதுவங்கிஉள்ளது. இது தொடர்பாக டெல்லியில்மத்தியஅமைச்சர்கள், அருண்ஜெட்லி, நிர்மலாசீதாராமன்ஆகியோரைதமிழக அமைச்சர்கள் அமைச்சர்கள்தங்கமணி, வேலுமணிஆகியோர், சந்தித்து முதல்கட்டஆலோசனைநடத்திஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தம்பிதுரைஉள்ளிட்ட, எம்.பி.,க்கள்சிலர், முட்டுக்கட்டைபோடுவதாக தெரிகிறது. இதைப் பயன்படுத்தி , சந்திரசேகரராவ், காய்நகர்த்ததுவங்கி உள்ளார்.

இதற்காக, அதிமுக எம்.பி.க்களிடம் தெலங்கானா எம்.பி.க்கள் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்கள் மூலம் இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த சந்திப்பை எடப்பாடியும் விரும்புவதாகவும் இதன் மூலம் பாஜகவுடனானான கூட்டணி பேச்சு வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தெரிகிறது.

ஏற்கனேவே மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதால் தமிழகத்தில் அக்கட்சிக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் இந்தக் கூட்டணி வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்கள் நினைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு, .தி.மு.., தலைமைஏற்கலாம்என்றும் , பா..., - தே.மு.தி.., போன்றகட்சிகளும், தி.மு.., கூட்டணியில்சேரமுடியாதகட்சிகளும், இங்கேவரலாம்என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழக அதிமுக தலைவர்களை சந்திர சேகர்ராவ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.