குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 11 எம்.பி.,கள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசுக்கு உதவவுள்ளது. 

இந்த சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களையும், பூடான் கிறிஸ்தவர்களையும் சேர்க்கவில்லை. இதனை கண்டித்து ட்விட்டர் பக்கத்தில் #அடிமைஅதிமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை அந்த ஹேஷ்டேக்கை 1834 பேர் டேக் செய்துள்ளனர்.