Asianet News TamilAsianet News Tamil

பண வினியோகத்தில் கை வைத்த அதிமுக நிர்வாகி... பொங்கி எழுந்த மக்கள்.. தேனியில் நடந்த கூத்து!

அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை ஸ்வாகா செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.
 

Admk functionary money distribute in Theni
Author
Usilampatti, First Published Apr 17, 2019, 9:28 AM IST

வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதைத் தடுக்க அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில் முழு பணத்தையும் வினியோகிக்காத அதிமுக நிர்வாகி வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Admk functionary money distribute in Theni
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் பணபட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்துவருகிறது. அதிமுகவின் பணப்பட்டுவாடாவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன. Admk functionary money distribute in Theni
இந்நிலையில் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வினியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை ஸ்வாகா செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.

Admk functionary money distribute in Theni
பெண்கள் அதிகளில் முற்றுகையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்ததால், முழுத் தொகையை பட்டுவாடா செய்வதாக அந்த நிர்வாகி உறுதியளித்ததாகத் தெரிகிறது. அதிமுக நிர்வாகியின் உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios