தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த பதவிக்கு எச்.ராஜாவை இறக்கி அதிரடிகாட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் செல்வாக்கை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த பதவி முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கே. என பேச்சு அடிபடுகிறது.

தமிழக பாஜக தலைவராக 2 முறை பதிவிவகித்துவிட்டார்  தமிழிசை.  அவரது பதிவிகாலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு  பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழிசைக்குப்பின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ரதாகிருஷ்ணன், கோவையைச்சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் வானதி சினிவாசன், தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ,கே.டி. ராகவன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அதில் தமிழிசைசௌந்திரராஜன் தமிழக பாஜவை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருந்தார், அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு இணையாக தமிழக அரசியலில் உடனுக்கும் வினையாற்றிவந்தார், இதனால் துடிப்பு மிக்க கட்சியாக பாஜக இருந்து வருகிறது அவருக்குப்பின்னும் அதை நிலைமை தொடர வேண்டும் என்றால் ஒரு துடிப்பு மிக்க தலைவர் தமிழக பாஜகவுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவரும் அதிரடி அரசியல்வாதி என்று பெயரெடுத்துவரும் எச். ராஜாவுக்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் அது சரியாக இருக்கும் என்றும் அவருக்கு வாய்ப்பு அதிகம் என்றும் பாஜகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

அதேபோல். அதிமுகவில் அமைச்சராக பதவிவகித்து பின்னர் அந்த கட்சியிலுருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துகொண்டவர் நயினார் நேகேந்திரன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாரபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளருக்கு டப் கொடுத்தார். அமித்ஷாவிடம் செல்வாக்கு பெற்றவருமாகவும் இருந்துவருகிறார்.  பிற்படுத்தப்பட்ட மக்களின் மத்தியில் கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழிசைக்கு தலைவர் பதிவி வழங்கப்பட்டு அதில் ஓரளவுக்கு பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில்.  

இந்த முறை அந்த பதவி முக்குலத்தோர் சமூகத்தைச்சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்குத்தான் வழங்கப்படப் போகிறது. என பாஜகவின்  மற்றொரு தரப்பினர் அடித்துச் சொல்கின்றனர். நயினாருக்கு பதிவி கொடுப்பதன் மூலம் நாடார் சமூகத்தைப்போல , பெரிய வாக்குவங்கி சமூகமான முக்குலத்தோர் மத்தியிலும் கட்சியை கொண்டும் சேர்க்க முடியும்.  தென் மாவட்டங்களில்  கட்சியை பலப்படுத்தவும் முடியும் அதனால் தான் அவருக்கு இந்த தலைவர் பதவி என்று அதற்கு விளக்கமும் சொல்கின்றனர்.