அதிமுகவின் இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பில்லை என ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளர் செம்மலை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை சசிகலா குடும்பமே ஆண்டு கொண்டு இருந்தது. பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்ததால் அவரும் கட்சியை விட்டு பிரிந்து தனி அணியாக உருவாக்கினார்.

அவருக்கென்று தனி கூட்டம் உருவாகியது. இந்நிலையில், அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் ஒ.பி.எஸ் பக்கமே திரண்டனர்.

இதனால் ஆட்சியை பிடித்த எடப்பாடி அரசு கதிகலங்கி போய் நிற்கிறது. எப்போது யார் தன்னிடம் இருந்து கலந்து ஒ.பி.எஸ் பக்கம் செல்வார்களோ என்ற பயம் எடப்பாடி அரசை துரத்தியது.

இதனிடையே சசிகலாவும் சொத்து குவிப்பு வழக்கில் சிறை உள்ளே உள்ளார். அவரிடம் எந்த ஆலோசனையும் கேட்க முடியாத சூழலில் எடப்பாடி உள்ளார்.

மேலும் சசிகலா விட்டு சென்ற தினகரனும் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்கவே தெரியாத சைத்தானை விட தெரிந்த பிசாசே மேல் என்பது போல எடப்பாடி ஒ.பி.எஸ்சை தன் கட்டுக்குள் கொண்டு வர முடிவெடுத்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியின் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதில் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்றாதாக தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தினகரனும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஒ.பி.எஸ் எடப்பாடி அணிகள் குறித்த பேச்சுவார்த்தை சில நாட்களாக எப்போ எப்போ என்று காத்து கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள்.

இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பில்லை என ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளர் செம்மலை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளளார். மேலும் பேச்சுவார்த்தைக்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.