Asianet News TamilAsianet News Tamil

குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடித்ததை மறந்த திமுக... ’அம்மா’மார்களை அலட்சியப்படுத்திய அதிமுக..!

திமுக- அதிமுக மக்களவை வேட்பாளர் பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு கட்சிகளும் 20 தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலில் பெண்களும், சிறுபான்மையினரும் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

admk dmk didnt allot seat muslims
Author
Tamil Nadu, First Published Mar 20, 2019, 12:08 PM IST

திமுக- அதிமுக மக்களவை வேட்பாளர் பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு கட்சிகளும் 20 தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலில் பெண்களும், சிறுபான்மையினரும் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. admk dmk didnt allot seat muslims

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தும் திமுக, அதிமுக கட்சிகளும் அதனை வேட்பாளர்கள் தேர்வில் பின்பற்றவில்லை. அதிமுகவில் காஞ்சிபுரத்தில் மரகதம் குமாரவேல் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் திமுகவில் கனிமொழியும், தமிழச்சி தங்கபாண்டியனும் பட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் கனிமொழியும், தமிழச்சி தங்கபாண்டியனும் வாரிசுகள். கடந்த முறை ஜெயலலிதா மக்களவை தேர்தலில் நான்கு பெண்களை நிறுத்தி எம்.பி ஆக்கினார். admk dmk didnt allot seat muslims

இரு கட்சிகளும் சிறுபான்மை சமூகத்தினருக்கு சீட்டை கூட ஒதுக்கவில்லை என்பது பரபலாக பேசப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் சிறுபான்மையினர் தவிர்க்கப்பட்டதே இல்லை. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளது. அது முஸ்லீம் கட்சி என்பதால் அங்கு இஸ்லாமியர் ஒருவர் களமிறக்கப்படுவது வழக்கமே. ஆனால் திமுக நேரடியாக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்ல. 

அதைவிட கொடுமை அதிமுகவில் வேட்பாளர் யாரும் இல்லை என்பதையும் தாண்டி இஸ்லாமிய அமைப்புகளிடம் தோழமைகூட காட்டவில்லை. ராமநாதபுரத்தில் அக்கட்சியை சேர்ந்த அன்வர் ராஜாவுக்கு சீட் தரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. admk dmk didnt allot seat muslims

பாஜகவில் இஸ்லாமியருக்கு சீட் ஒதுக்க வாய்ப்பே இல்லை. அதேபோல், முஸ்லீம் வாக்குகள் அதிகம் உள்ள ராமதாபுரத்தில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி இஸ்லாமியர் அங்கு நிறுத்தப்பட்டு விட்டார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இஸ்லாமியர் அல்லாத ஒருவரையே நிறுத்த உள்ளது. அதேபோல் மத்திய சென்னை தொகுதியில் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம். ஆனால், இந்தத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கி விட்டது அதிமுக. திமுக சார்பில் இத்தொகுதியில் தயாநிதி மாறன் களம் காண்கிறார். அந்த வகையில் இங்கு அமமுக கூட்டணியை சேர்ந்த தெகலான் பாகவி எஸ்.டி.பி.ஐ சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.admk dmk didnt allot seat muslims

சிறுபான்மையினரின் காவலன், மதசார்பற்ற கூட்டணி என திமுக மேடைதோறும் முழங்கி வந்தாலும், அவர்களை புறக்கணிப்பதை இந்த வேட்பாளர் பட்டியல் மூலம் உணர முடியும். இந்த விஷயத்தில் திமுக, அதிமுக கோட்டை விட்டதை அமமுக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது. தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்து ஆதரவளித்து வருகின்றன. மகளிர், சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளது திமுக- அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இருகட்சிகளும் பிற மதத்தினரை கண்டு கொள்ளாமல் தங்களது வாரிசுகளுக்கு சீட்டை ஒதுக்கியுள்ளதும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் உண்மை’’ எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios