வருமான வரி மற்றும் செல்வ வரி கட்டாததால் ஜெயலலிதாவின் போயஸ் வீடு உள்ளிட்ட சில சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது: செய்தி. 
(அம்மா வழியில் ஆட்சி, அம்மா வழியில் ஆட்சி!...ன்னு சொல்லிட்டிருந்த அந்த வி.வி.ஐ.பி.க்களெல்லாம் வரிசையில வாங்க சார்! ஒங்களுக்கெல்லாம் வீடு, வாசல்ன்னு வாழ்க்கை கொடுத்த அந்தம்மாவோட வீடே முடங்கிப் போச்சு. ஆட்சி கையிலிருந்தும் நாலு செங்கலை காப்பாற்ற முடியலையா உங்களாலே?ன்னு அம்மாவோட ஆன்மா அழுவாதா? )

தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அராய்ந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். 


(பஞ்சாயத்து ராஜெல்லாம் கிடக்கட்டும்ணே! உங்க கட்சிக்குள்ளே உங்களுக்கும், இளங்கோவனுக்கும் நடுவுல நடக்குற பஞ்சாயத்தைப் பார்த்தா மிச்சம் மீதி இருக்கிற தொண்டர்களும் பிய்ச்சுப்பாங்களோன்னு டெல்லி அதிர்ச்சியில கிடக்குறதை முதல்ல கவனியுங்க.)

7 தமிழர்கள் விடுதலை விஷயத்தில் ஆளுநரால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்களால் நம்ப முடியவில்லை: டாக்டர் ராமதாஸ்.


(என்ன தல வர வர நீங்களும் ஒலகநாயகன் மாதிரி சுத்தி வளைச்சு பேச துவங்கிட்டீங்க? அதிருக்கட்டும், நீங்க கொஞ்ச நாளா மத்திய மாநில அரசாங்கங்களை முதுகுல தடவிக் கொடுக்குறதை கூடத்தான் மக்களால் நம்ப முடியலை. அதுக்கென்ன பண்ண?)

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண அரசு முன்வராததே வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரணம்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
(ப்பார்றா எம்பூட்டு கஷ்டப்பட்டு தோண்டித் துருவி இந்த போராட்டத்துக்கான காரணத்தை இப்ப சொல்லியிருக்கீங்க காம்ரேட்! ஒரு வழியா தூங்கி எந்திரிச்சாச்சு போல, போயி சூடா ஒரு டம்ளர் டீ சாப்ட்டு வாங்க, பேசலாம்!)

தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் எங்களை ‘செயலற்றவர்கள், ஊழல் கட்சி’ என்று விமர்சிக்கும் போது வாயை மூடி இருக்க நான் தயாராக இல்லை!: தம்பிதுரை. 

(கரெக்ட்டுதாம்ணே, ஆனால் பி.ஜே.பி. மீதான உங்க விமர்சனமெல்லாம் உங்க தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்!’ அப்படின்னு உங்க கட்சி அமைச்சர் ஜெயக்குமாரே செதுக்கிச் செதுக்கி சொல்லிட்டு இருக்காரே! இதுக்கு என்ன பண்ணுவீங்க? அது சரி, ஜெயலலிதா இறந்ததுல இருந்து உங்க கட்சியை அவிய்ங்க வெச்சு செஞ்சுட்டு இருக்கிறாங்க. ஆனா நீங்க இப்பதாம்ணே கொதிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. ஏன் இம்புட்டு லேட்டு?)