திருநெல்வேலி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராசையா உள்ளிட்ட 250 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமை சீட் கொடுக்காத அதிருப்தியில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும் அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறியாளர் கலைவாணி திமுகவின் அடிப்படை உறுப்பினராக, நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் 250 அதிமுகவினர்களும், திமுகவில் இணைந்தனர்.
