வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக புதிய கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இந்தக் கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே போல் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க பா.ஜ., முயற்சி மேற்கொண்டது. அ.தி.மு.க.,வினரும் பேச்சு நடத்தினர். 'பா.ம.க.,வை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும்' என, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ், அ.தி.மு.க.,விடம், வலியுறுத்தியுள்ளார். ஆனால், மூன்று தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என, அ.தி.மு.க., உறுதியாக கூறிவிட்டது.

இந்நிலையில் தேர்தல் பொதுகூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை தமிழகம் வருகிறார். இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என, பாஜக விரும்புகிறது. எனவே, இன்றைக்குள் கூட்டணிக்கு வராவிட்டால், தேமுதிக வை, 'கழற்றி' விட, அதிமுக  முடிவு செய்துள்ளது..

தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்து சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தேமுதிக கேட்காமல் பாமகவுக்கு ஒதுக்கியது போல் வேண்டும் அடம் பிடித்து வருவதால் கடுப்பான அதிமுக அவர்களை கழற்றிவிடுவது என முடிவு செய்துள்ளது. இன்று மாலை அதிமுக இந்த முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது