Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத்தில் மோதிக்கொண்ட அதிமுக - காங்கிரஸ் - ஏன் தெரியுமா?

admk and congress mps crash
admk and congress mps crash
Author
First Published Mar 27, 2018, 2:28 PM IST


காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் காங்கிரஸ் - அதிமுக எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் மோதலாக தொடர்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்கட்சிகள் எம்.பிக்களை ராஜினாம செய்ய வலியுறுத்துகின்றன. ஆனால் அதிமுக அரசு நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகின்றனர். 

அந்த வகையில் இன்று நாடாளுமன்றம் 16 வது நாளாக முடங்கியது. இதனால் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் அதிமுக எம்.பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios