கமல்ஹாசன் அண்மையில் அமெரிக்கா சென்றிந்தார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு நவம்பர் 22ம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை, போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கமல்ஹாசன் அண்மையில் அமெரிக்கா சென்றிந்தார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு நவம்பர் 22ம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். நடப்பு பிக்பாஸ் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.