Asianet News TamilAsianet News Tamil

இறங்கி வந்தது திமுக… காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள்…. கூட்டணியில் கமலஹாசனுக்கு இடம்!! தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை தொடக்கம் !!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் அதாவது வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒழக்க முடியும் என திமுக சொல்லிவிட்ட நிலையில் தற்போது கூடுதலாக 6 இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி தான் விரும்பும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

additional seat for congress in dmk allaiance
Author
Chennai, First Published Nov 7, 2018, 7:00 AM IST

நாடாளுமன்றத்  தேர்தலுக்கான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் தற்போது பேச்சு வார்த்தைத் தொடங்கியுள்ளது.  அதேநேரத்தில் தனியாக அணி சேர்த்து வரும் காங்கிரஸ், தி.மு.க., அளிக்கும் தொகுதிகளில் உள் ஒதுக்கீடு செய்து பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளது.
additional seat for congress in dmk allaiance
நாடாளுமன்றத்  தேர்தலில், ஜெயலலிதாவைப் போல் 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட திமுக விரும்பவில்லை. கடந்த 2014ல் நடந்த நாடு முழுவதும் நடந்த தேர்தலில், காங்கிரசுக்கு கடும் எதிர்ப்பும், மோடிக்கு ஆதரவான அலையும் வீசிய நேரத்தில் கூட, தமிழகத்தில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 4 சதவீத வாக்குகளை பெற்றது.

தற்போதையநிலையில்  மத்திய அரசின் எதிர்ப்பு ஓட்டுக்கள், தங்களுக்கு ஆதரவாக மாறும் என, காங்கிரஸ் கட்சி கணக்கு போட்டுள்ளது. நாடாளுமன்றத்  தேர்தலின் போது, மத்தியில், காங்கிரசா அல்லது பாஜகவா என்ற நிலைமை கட்டாயம் வரும். எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்யின் வாக்கு சதவீதம் உயரும் என அக்கட்சி நம்புகிறது.

additional seat for congress in dmk allaiance

கூட்டணியில்  , தி.மு.க., தொகுதிகளை ஒதுக்க முன் வந்தால், அதை சமாளிக்கும் வகையில், புதிய கட்சிகளை துணை சேர்க்கவும் திட்டமிட்டு, காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. அதே நேரத்தில், திமுகவிடம்அதகி தொகுதிகளைக் கேட்டு நச்சரித்து வருகிறது. ஒரு வேளை அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டால் . தற்போது புதிய கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகளுக்கு உள ஒதுக்கீடு  அளிக்கவும் காங்கிரஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

additional seat for congress in dmk allaiance

இந்நிலையல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக, ஆறு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., இறங்கி வந்துள்ளது. அந்த, 12ல், ஒரு தொகுதியை, புதுச்சேரி காங்கிரசுக்கும், ஒரு தொகுதியை, கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கும், உள் ஒதுக்கீடாக வழங்க, காங்., மேலிடம் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
additional seat for congress in dmk allaiance
மேலும், அ.தி.மு.க., - பா.ஜ., அணிக்கு எதிராக, மெகா அணி அமைக்கும் வகையில், பா.ம.க., - த.மா.கா., மக்கள் நீதி மையம் ஆகிய, மூன்று கட்சிகளையும், தி.மு.க., கூட்டணியில் சேர்க்கவும், பேச்சு நடந்து வருகிறது. இவற்றை தவிர, தி.மு.க., கூட்டணியில், ஏற்கனவே உள்ள, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் சேர்த்து, மொத்தமாக, 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தயாராகி உள்ளது.

additional seat for congress in dmk allaiance

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர், பாலகிருஷ்ணன், அக்கட்சியின் எம்.பி., - டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர், நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

additional seat for congress in dmk allaiance

இதைனத் தொடர்ந்த  மார்க்சிஸ்ட் கட்சியின்  பொது செயலர், சீதாராம் யெச்சூரி ஸ்டாலினைச் சந்திது பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios