சிறையில் திருமுருகன் காந்திக்கு பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டதால் தான் தற்போது வரை அவரால் உடல் நலக்குறைவு இருந்து மீள முடியவில்லை என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஆண்டு திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து மேலும் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருமுருகன் காந்தி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் தனி அறையில் யாரும் இல்லாத ஒரு இடத்தில் பாம்புகள் நடமாட்டம் வகையில் திருமுருகன் காந்தி சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

துறையில் திருமுருகன் காந்திக்கு முறையான உணவு வழங்கவில்லை என்றும் இதனால் அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஏற்பட்டு அல்சரால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு திருமுருகன் காந்தி அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

ஆனால் முன்புபோல் திருமுருகன் காந்தி எந்த விவகாரங்களிலும் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருக்கிறார். இதற்கு காரணம் சிறையில் அவர் அனுபவித்த சித்ரவதைகள் தான் என்றும் இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக பொது விவகாரங்களில் தற்போது தலையிட திருமுருகன் காந்தி யோசிக்கிறார் என்று எதிர் தரப்பு புரளியைக் கிளப்பி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன் காந்தி தற்போது பரபரப்பு தகவல் ஒன்றை பரப்பி வருகிறது.

அதன்படி திருமுருகன் காந்தி சிறையில் இருந்தபோது மெல்லக் கொல்லும் பாதரசத்தை உணவில் கலந்து சிறை அதிகாரிகள் கொடுத்துள்ளதாக திடுக் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்தான் திருமுருகன் காந்திக்கு தற்போது வரை வயிற்று வலி மற்றும் அல்சர் சரி ஆக வில்லை என்றும் சிறையில் பாதரசம் கொடுக்கப்பட்டதை உறுதி படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக திருமுருகன் காந்தியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வது பற்றியும் கூட ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருமுருகன் காந்தி இடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக எந்த பதிலும் சொல்லாமல் திருமுருகன் காந்தி சென்றுவிட்டார். இதன் மூலம் இந்த பாதரச விசா விவகாரம் தேர்தலுக்குப் பிறகு மிகப் பெரியதாக வெடிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.