ரூ.3 கோடி கேட்டு 50 லட்சத்துக்கு பேரம் பேசியதாக நடிகை சாந்தினி மீது பகீர் குற்றச்சாட்டை அளித்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன். 

ரூ.3 கோடி கேட்டு 50 லட்சத்துக்கு பேரம் பேசியதாக நடிகை சாந்தினி மீது பகீர் குற்றச்சாட்டை அளித்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யச் சொன்னதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும். 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தனக்கு மணிகண்டனிடம் இருந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கமளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,’’நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

3 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போலீசில் புகார் கொடுக்கப்போவதாக என்னிடம் போனில் மிரட்டினார்கள். புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி வேண்டும் என்றனர். நான் செய்யாத தவறுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்றேன். முதலில் ரூ.3 கோடி கேட்டவர்கள் பின்னர் படிப்படியாக இறங்கி ரூ.50 லட்சம் கடைசியாக கேட்டனர். நான் தர முடியாது என்று கூறி விட்டேன்.

பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை பயன்படுத்தி உள்ளனர். பொய்யான இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன். எனது மனைவியுடனும் இது பற்றி போனில் பேசி மிரட்டி உள்ளனர்’எனத் தெரிவித்துள்ளார்.