ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆகிறார். 

ஆந்திராவில் ராயலசீமா பிராந்தியம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா போட்டியிட்டார். ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரோஜாவுக்கு 79,499 வாக்குகளும், காளி பானு பிரகாசுக்கு 76,818 வாக்குகளும் கிடைத்தன. 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இதே தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 858 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அப்போது ரோஜாவுக்கு 1,58,201 வாக்குகள் கிடைத்து இருந்தன. ரோஜா ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். பின்னர் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவினார். 

ஜெகன்மோகன்ரெட்டியின் விசுவாசத்திற்கு உரியவரான ரோஜா கட்சிக்காக பல போராட்டங்களை முன்நின்று நடத்தியுள்ளார்.தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளதால், ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.