பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்திருந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, நிகழ்ச்சிகளை முடிந்துகொண்டு டெல்லிக்கு திரும்ப விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த நடிகை நமீதா, பாஜகவில் இணைந்தார். பின்னர்  நமீதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழக மக்களுக்கு உதவ வேண்டும் என்பது என் ஆசை. அதனால், ஜெயலலிதா ஆசியுடன் பாஜகவில் இணைந்தேன். 
கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்தத் திட்டங்கள் என்னை கவர்ந்தன. அதனாலேயே பாஜகவில் இணைய முடிவெடுத்தேன். ஜெயலலிதாவும் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலனையே கொண்டு இருந்ததார். மோடியும் அதையே கொண்டிருக்கிறார்.
பாஜகவில் எனக்கு பொறுப்புகள் வழங்கப்படுமா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அது விரைவில் உங்களுக்கு தெரியவரும். மக்களுக்கு சேவை செய்ய  வேண்டு8ம் என்பதை  பார்த்துதான் அரசியல் கட்சிகளில் இனைக்கிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் நான் போட்டியிடுவேன்” என்று நமீதா தெரிவித்தார்.  நடிகை நமீதா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கி அமைதியாகிவிட்டார். இந்நிலையில் அவர் பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். நமீதாவின் சொந்த ஊர் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.