ஏன் பாஜக எப்போதும் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்ச்சி செய்கிறது, இதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.   சமூக நிகழ்வுகளாக இருந்தாலும் சரி,  அரசியல் கட்சிகளில் நடவடிக்கைகளானாளும் சரி  தனது கருத்தை  தயக்கமின்றி எடுத்து கூறி வருகிறார் நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி ,  இந்நிலையில்  மத்திய பிரதேச மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் குறித்து அவர் கருத்து பதிவிட்டுள்ளார் .  அதாவது முதல் அமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக  ஜோதிராதித்ய சிந்தியாவின்  ஆதரவு பெற்ற 17 எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின . 

இதனையடுத்து அவர்கள்  பாஜக தலைவர்களை சந்திக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில்,  சிந்தியா மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்தார் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கர்நாடகாவில்  ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்ததற்கு மூளையாக செயல்பட்ட பாஜகவின் அரவிந்த்  லிம்பாவலி இந்த விவகாரத்தை கையாண்டதாகவும் செய்திகள் வெளியாகின .

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி ,  " ஏன் எப்போது பார்த்தாலும் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்ற பார்க்கிறது.?  இப்படி பதவிக்காக வாய்பிளந்து நிற்கும் பருந்தாக இருக்காமல் சற்று பொறுமையாக இருந்து காங்கிரஸ் தானாகவே வெடித்து சிதறி விட வேண்டியதுதானே.? 

ஏன் அப்படி செய்யாமல் பதவிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது பாஜக என்று புரியவில்லை .  காங்கிரசால் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதையும் தனது செயலின் மூலம் காட்ட பாஜக முயற்சிக்கலாமே .  அப்படியே காங்கிரசை  செயல்படாவிட்டால் பாஜகவுக்கு அது நீண்டகால பலனையே தரும் அது மக்கள் மத்தியில் நல்ல கருத்தை உருவாக்கும் .  மகாராஷ்டிராவில் கற்றுக்கொண்ட பாடத்தை பாஜக நினைவுகூற வேண்டும். எப்போதும் உங்களது உள்ளூர் தலைவர்கள் எப்படியாவது தலையை தேன்கூட்டுக்குள் விட்டு தேனை எடுக்க வாய்ப்பு தேடுகிறார்கள் பாருங்கள் ரொம்ப மோசம்.  இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .