Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ஜெயக்குமாரின் சீசன் 2: மறப்போமா? மன்னிப்போமா!

*    கதிர்காமுவின் ஆபாச வீடியோ வெளியானதில் உங்களின் பங்கு உள்ளதா? என என்னிடம் கேட்கின்றனர். அப்படியொரு ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது: ஓ.பன்னீர்செல்வம். 
 

actress jaikumar season 2
Author
Chennai, First Published Apr 16, 2019, 3:11 PM IST

*    கதிர்காமுவின் ஆபாச வீடியோ வெளியானதில் உங்களின் பங்கு உள்ளதா? என என்னிடம் கேட்கின்றனர். அப்படியொரு ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது: ஓ.பன்னீர்செல்வம். 
(அதானே தலைவரே! யாரப்பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டாங்க. போலீஸ்காரங்களை வெச்சே ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்குற அளவுக்கு நாம ஸ்கெட்ச் போட்டு பண்றப்ப, இப்படியான ஈன காரியத்தை எதுக்கு பண்ணப்போறோம்?)

*    நான் ஜெயலலிதா பாணியில் பிரசாரம் செய்வதாக கூறுகின்றனர். நான் எப்போதும் எனக்கென தனி பாணி வைத்துள்ளேன். ஜெ., இருக்கும்போது என் பிரசாரத்தை கவனிக்காதவர்கள் இப்போது கவனித்துவிட்டு அப்படி சொல்கிறார்கள்:    பிரேமலதா. 
(அண்ணன் ஜெயக்குமார் அவர்களின் கனிவான கவனத்துக்கு....’மறப்போம், மன்னிப்போம்’ சீசன் 2)

*    ராமதாஸும், அன்புமணியும் மருத்துவர்கள். நாடி பிடித்து, என்ன நோய் என்று கண்டுபிடிக்க கூடிய மருத்துவர்கள். ஆனால் அவர்களுக்கு என்ன நோய் வந்துள்ளது என்று பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு வந்துள்ளது: தா.பாண்டியன். 
(இருக்கட்டும் தல. 2011 சட்டசபை தேர்தல் தொடங்குனப்ப கோயமுத்தூர்ல வெச்சு ‘ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்துக்கு கூடும் கூட்டம் மகிழ்ச்சி தருகிறது, ஆச்சரியப்படுத்துகிறது.’ன்னு இதே வாயாலேதானே சிலாகிச்சீங்க. இப்ப நீங்க ஏன் தளபதி மடியில சரண்டராயிட்டீங்க?)

*    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், இருக்கும் வேலை வாய்ப்புகளில் தமிழகத்துக்கு உரிய பங்கை முழுமையாக பெற்றால் மட்டுமே தமிழர்க இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிட முடியும்: ராமதாஸ். 
(எங்கேயோ பிசிறடிக்குதே டாக்டரய்யா! பொதுவா ரிசல்டுக்கு அப்புறம் தானே இப்படி பொது நன்மைக்காக குரல் கொடுப்பீங்க? அணி மாறுவீங்க, இப்ப என்ன, வாக்குப் பதிவுக்கு முன்னாடியே வாய்ஸை மாத்துறீங்க!)

*    எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசுதான். அதற்கு நிலத்தை எடுத்துக் கொடுத்தது மட்டும்தான் மாநில அரசின் வேலை. ஆனால் அந்த திட்டத்தை மக்கள் நலனுக்காகதான் மத்தியரசு கொண்டு வந்தது: எடப்பாடி பழனிசாமி. 
(ஆஹா தாமரைக்கு தகடு வைக்க ஆரம்பிச்சுட்டீங்களா தலைவரே? ஏதோ ஒரு முக்கியமான சர்வே, மிக உறுதியான முடிவை சொல்லிடுச்சுன்னு நல்லாவே புரியுது. அடிச்சுத் தூக்குங்க.)

Follow Us:
Download App:
  • android
  • ios