ட்விட்டரிலிருந்து நடிகை திவ்யா ஸ்பந்தனா எஸ்கேப்... அதிர்ச்சியில் காங்கிரஸ் சமூக வலைத்தளவாசிகள்!
அவருடைய செயல்பாடுகள் பிடித்துபோனதால் 2017-ல் சமூக வலைதளப் பொறுப்பாளர் பதவியை ராகுல் வழங்கினார். சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிராக ஏதேனும் கருத்துகள் தீவிரமாக ஒலித்தால், அதற்கு காரணம் திவ்யா ஸ்பந்தனாதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவுக்கு தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா யாருக்கும் எதுவும் சொல்லாமல் ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.
தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. ‘குத்து’ ரம்யா என்ற தமிழில் செல்லமாக அழைப்பார்கள். 2011-ல் அரசியலில் குதித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் மாண்டியா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டு மட்டுமே எம்.பி.யாக இருந்த நிலையில், 2014-ல் நடந்த தேர்தலிலும் மறுவாய்ப்பு பெற்றார்.
தேர்தலில் தோற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். அவருடைய செயல்பாடுகள் பிடித்துபோனதால் 2017-ல் சமூக வலைதளப் பொறுப்பாளர் பதவியை ராகுல் வழங்கினார். சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிராக ஏதேனும் கருத்துகள் தீவிரமாக ஒலித்தால், அதற்கு காரணம் திவ்யா ஸ்பந்தனாதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவுக்கு தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
தற்போது முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாரமன் பதவியேற்ற பிறகு, அவருக்கு திவ்யா ஸ்பந்தனா பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்திரா காந்திக்கு அடுத்தப்படியாக இந்தப் பதவிக்கு வந்ததைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கிலிருந்து திடீரென வெளியேறி இருக்கிறார் திவ்யா ஸ்பந்தனா. சமூக ஊடக பொறுப்பாளராக இருந்துகொண்டு முன் அறிவிப்பு ஏதுமின்றி, அவர் விலகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ட்விட்டரில், இதற்கு முன்பு அவர் பத்விட்ட தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திவ்யா எதுவும் அறிவிக்கவில்லை. இதனால், திவ்யா பாஜகவில் இணைகிறார் என கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திவ்யாவின் தாத்தாவான கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது பாஜகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது/