Asianet News TamilAsianet News Tamil

மிரட்டப்படுகிறாரா தளபதி விஜய்? ‘உள்ளே வராதே!’ன்னு தடுப்பது யார்? மெர்சலாகும் மக்கள் இயக்கம்!

தி.மு.க.வின் தலைமை மற்றும் குடும்ப வட்டாரத்துக்கு விஜய்யின் இந்த திடீர் அரசியல் எழுச்சி விருப்பமானதாக இல்லை! என்கிறார்கள்

Actor Vijay threatened for entering politics
Author
Chennai, First Published Jan 2, 2022, 1:03 PM IST

”விஜய் தன்னோட சினிமாவுல அடியாட்களை பார்த்து ‘சாமி கிட்ட மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடைங்கட்ட இல்ல!’ அப்படின்னு பொளேர் பஞ்ச் டயலாக் பேசுறாரு. ஆனால், யதார்த்த வாழ்க்கையில பம்மிதான் இருப்பார் போல. தன் இயக்கத்தை மிரட்டும் சக்திகளை அவரால என்ன பண்ண முடியுது?” என்று தெறிக்க விடுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதாவது, சமீபத்தில் முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் நூற்றைம்பது முதல் இருநூறுக்கு உள்ளான பதவிகளுக்கு விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ சார்பாக அவரது ரசிகர்கள் போட்டியிட்டனர். இதில் மிக கணிசமான இடங்களில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ‘சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக விஸ்வரூபமெடுத்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கூட விஜய்யின் ரசிகர்கள் தோற்கடிச்சுட்டாங்க.’ என்று ஒரு உரசல் குரல் எழுந்து, சீமானை சீற வைத்தது.

Actor Vijay threatened for entering politics

தேர்தலில் வென்றவர்களை சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து, குரூப் போட்டோ எடுத்து, சாப்பாடு தந்து உபசரித்து, ‘மக்களுக்காக உழைங்க’ என்று வாழ்த்தெல்லாம் சொல்லி, அனுப்பி வைத்தார் விஜய்.

ஊரக உள்ளாட்சியில் கிடைத்த வெற்றி, விஜய் டீமை உற்சாகமாக்கி உள்ளது. இதனால் அடுத்து வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் தயாராக துவங்கியுள்ளனர். குறிப்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் குறிப்பிட்ட வார்டுகளை தேர்வு செய்து நின்று, வலுவாக பிரசாரம் செய்து, ஆளும் மற்றும் எதிர்கட்சிகளுக்கு கடும் ஷாக்கை கொடுக்கும் வகையில் வெல்ல வேண்டும்! என்று திட்டமிட்டுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இது தொடர்பாக மாநிலம் முழுவதுமுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி, கருத்துக்களைப் பெறுகிறார். அதை அப்படியே விஜய்யிடம் சொல்லி, அவரது வழிகாட்டுதல்களை பெற்று மீண்டும் இவர்களிடம் பேசி வருகிறார். ஆக மொத்தத்தில் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கி கலக்க தயாராகி வருகிறது விஜய் டீம்.

Actor Vijay threatened for entering politics

இச்சூழலில், விஜய்யின் இந்த திடீர் அரசியல் எழுச்சியானது இரண்டு பெரிய கட்சிகளையும் கலக்கமடைய வைத்துள்ளதாம். இன்னும் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆட்சி காலம் உள்ள நிலையில் ‘அடுத்தும் தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்க வேண்டும். உதயநிதி துணை முதல்வராக வேண்டும்.’ எனும் தீவிர ஆர்வத்திலிருக்கும் தி.மு.க.வின் தலைமை மற்றும் குடும்ப வட்டாரத்துக்கு விஜய்யின் இந்த திடீர் எழுச்சி விருப்பமானதாக இல்லை! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதேப்போல், ‘அடுத்து மீண்டும் நாம் ஆட்சியை பிடித்தேவிடுவோம்.’ என்று அ.தி.மு.க.வும் முழு வீச்சிலான நம்பிக்கையில் இருக்கிறது. அதனால் அவர்களும் விஜய்யின் அரசியல் வளர்ச்சியை இடையூறாக பார்க்கிறார்கள்! என்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பல கட்சிகளும் விஜய்யை எரிச்சலோடே பார்க்க துவங்கியுள்ளனவாம்.

இந்த நிலையில்தான், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிவரும் விஜய் மக்கள் இயக்கத்தை ‘அடங்கி இருங்க பாஸ். இப்போதைக்கு அரசியலுக்கு உள்ளே வந்து குழப்ப வேணாம்.’ என்று ஒரு டீம் மிரட்ட துவங்கியுள்ளதாக தகவல்கள் வெடித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் மேல் லெவல் வட்டாரத்தில் இந்த புகைச்சல் பெரிதாய் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் மிரட்டியது எந்த கட்சி என்று தெரியவில்லை! என்கிறார்கள்.

மிரட்டப்பட்ட விவகாரத்தை விஜய்யின் கவனம் வரை கொண்டு போயாச்சாம்! ஆனால் ரியாக்‌ஷன் பெண்டிங்கிலேயே இருக்குது! என்று அவரது இயக்க நிர்வாகிகள் டல்லடிக்கிறார்கள்.

ணா….ஏதாச்சும் பேசுங்ணா!

Follow Us:
Download App:
  • android
  • ios