Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்... நீதிபதியை கடிந்து கொள்ளும் தளபதி ரசிகர்கள்..!

எப்படி சம்பாதித்தார், எப்படிப்பட்ட திரைக்கதைகளில் நடித்தார், Tax என்றால் என்ன என்பதெல்லாம் தேவையற்றவை

Actor Vijay fined one lakh rupees ... Commander fans scolding judge
Author
Tamil Nadu, First Published Jul 14, 2021, 12:23 PM IST

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’’நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என கண்டனம் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒரு லட்சம் அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Actor Vijay fined one lakh rupees ... Commander fans scolding judge

இந்நிலையில், #Joseph Vijay என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதில்,  ‘’Duty Tax செலுத்தியிருப்பதால், Entry Tax Exemption உண்டா எனும் வழக்கில் தீர்ப்பிற்கு சம்மந்தமில்லாமல் சொந்த கருத்துகளை சொல்லி, நீதிமன்ற நேரவிரயம் செய்ததோடு மட்டுமில்லாது, 9 வருடங்கள் வழக்கை நிலுவையில் வைத்த நீதிபதிகளுக்கு தண்டனைத்தொகை கட்டுமாறு சட்டத்தில் இடம் இருக்கிறதா?Actor Vijay fined one lakh rupees ... Commander fans scolding judge

அரசுக்கு Import Duty-ஆக பெருந்தொகையை செலுத்தியிருக்கும் பொழுது Entry Tax Exemption உண்டா என்ற கேள்வி, ஆம் (அ) இல்லை என்ற பதில்கள் தான் கொடுக்க முடியும். கேள்வி கேட்ட நபர், எப்படி சம்பாதித்தார், எப்படிப்பட்ட திரைக்கதைகளில் நடித்தார், Tax என்றால் என்ன என்பதெல்லாம் தேவையற்றவை’’ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios