நம்மால அவங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதுண்ணே...! இவரெல்லாம் கிண்டலடிக்குமளவுக்கு ஆகிப்போச்சு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். நிலைமை!
அ.தி.மு.க.வை இப்போது சங்கடத்தில் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கெத்து ஏற்றிப் பேசுகிறேன் பேர்வழி! என்று இவர் எடுத்துவிடும் டயலாக்குகள் அத்தனையும் கட்டக் கடைசியில் காமெடி புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க.வை இப்போது சங்கடத்தில் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கெத்து ஏற்றிப் பேசுகிறேன் பேர்வழி! என்று இவர் எடுத்துவிடும் டயலாக்குகள் அத்தனையும் கட்டக் கடைசியில் காமெடி புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன.
‘மோடி எங்களின் டாடி! எடப்பாடியார் வாய் திறந்தா வரலாறு!’ என்று ரா.பா. எடுத்துவிட்டதெல்லாம் அதிரிபுதிரி காமெடியாகிக் கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் ஏரியாவில். ‘அண்ணே கொஞ்ச நாளைக்கு கம்முன்னு இருங்கண்ணே!’ என்று யாராச்சும் அட்வைஸினாலும் தல கேட்பதில்லை. இப்படி சொன்னதுக்காகவே நாலு பிட்டுகளை எக்ஸ்ட்ராவாக போட்டு எகிற வைக்கிறார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களின் ஹார்ட் பீட்டை. ஒரு சீரியஸ் அமைச்சர் இப்படி காமெடி பண்ணிக் கொண்டிருக்கையில், ஒரு காமெடி நடிகர் அ.தி.மு.க.வை சீரியஸாக திட்டியிருப்பதுதான் ஹைலைட்டே.
நடிகர் செந்தில்தான் சமீபத்தில் எடப்பாடியாரையும், பன்னீரையும் வெளுத்திருக்கிறார் இப்படி...”அம்மா மேலே வெச்சிருந்த பக்தியால அ.தி.மு.க.வுக்கு வந்தேன். அவங்க காட்டிய அன்பாலதான் இன்னைக்கும் விசுவாசியா கெடக்குறேன். ஆனால் அ.தி.மு.க.ங்கிற பெயரை வெச்சுக்கிட்டு தமிழகத்தை ஆளுற அணியை இப்ப எனக்கு பிடிக்கலை. காரணம்...மனசு ஒத்து வரல. ஏன் ஒத்து வரலேன்னா, அங்ஙன எல்லாரும் நடிக்கிறாய்ங்கண்ணே. அதுலேயும் அந்த பெரிய ஆளுங்க ரெண்டு பேரோட நடிப்பெல்லாம் சிவாஜி கணேசனுக்கு கூட வராதுண்ணே.
நிஜ வாழ்க்கையில என்னாலே நடிக்க முடியாதுண்ணே. சினிமாவுல நடிக்க சொல்லுங்க, ஏதோ எனக்கு தெரிஞ்சளவுக்கு நடிச்சு சிரிக்க வைப்பேன். ஆனா இவிய்ங்க நிஜ அரசியல்லேயே அந்த நடிப்பு நடிக்கிறாய்ங்க. நமக்கு அந்த செட்டு சரிப்பட்டு வராது. மக்கள் நல திட்டங்களில் ஆரம்பிச்சு உள் அரசியல் வரைக்கும் எல்லாத்துக்கும் நடிக்கிறாய்ங்க. அவிய்ங்க கிட்ட யதார்த்தமே இல்லண்ணே.
அதனாலதான் தினகரன் டீம்ல சேர்ந்துட்டேன். அவருக்கு எனக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறாருண்ணே. தினகரனுக்கு விசுவாசின்னா, அது சின்னம்மாளுக்கும் விசுவாசின்னுதானே அர்த்தம். தினகரன் ‘ம்ம்ம்ம்....’ன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும், சட்டுன்னு பிரசாரத்துக்கு வெறியா கெளம்பிடுவேன். ஜெயலலிதா அம்மாவோட உண்மையான இயக்கமான அ.ம.மு.க.வுக்கு நாலு ஓட்டு நம்மாள கிடைச்சா அதுதான்ணே நான் அவங்களுக்கு செய்யுற நன்றிக்கடனு. “ என்றிருக்கிறார். கெரகம் செந்திலெல்லாம் குத்திப் பேசி கிண்டல் விடுமளவுக்குன் ஆகிப்போச்சு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். நிலைமை பாவம்.