தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எதிர்பார்த்த கட்சிகளின் கூட்டணி, பிரபலங்கள் கட்சி திடீர் என ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியுடன் இணைவது என ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளும், பிரச்சாரம் செய்ய எந்த, நட்சத்திரங்களை மக்கள் முன் இறக்கலாம் என ஒரு பக்கம் யோசித்து வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஞ்சித், பாமகவில் இருந்து விலகி, டிடிவியின் அமமுகவில் இணைத்தார். இதை தொடர்ந்து தற்போது வில்லன் நடிகரும் இயக்குனருமான ரவிமரியா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு தன்னை அதிமுக கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகர் ஜீவா அறிமுகமான ஆசை ஆசையாய் படத்தை இயக்கியவர். அதன்பிறகு 'மிளகா' உள்ளிட்ட சில வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் அதன்பிறகு தொடர்ந்து வில்லனாக காமெடியனாக நடித்து வருகிறார்.

பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா', விஜய் நடித்த 'ஜில்லா' என 50 திற்கும் மேற்பட்ட, படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கியுள்ளார். 

இவரின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படங்கள் இயக்குவதை விட்டு விட்டு முழு நேர நடிகராகிவிட்டார். இந்நிலையில் அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து அந்தக் கட்சியில் சேர்ந்தார். 

"தற்போதுள்ள அரசு மக்களுக்கு நல்ல பணிகளை செய்து வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறார்கள். அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் அதிமுகவில் சேர்ந்தேன். இந்த கட்சிக்காக வருகிற பார்லிமென்ட் மற்றும், சட்டசபை தேர்தல்களில் பிரச்சாரம் செய்வேன்" என்றும் தெரிவித்துள்ளார் ரவிமரியா.