பாஜக ஒரு பக்கம் ரஜினியை அரசியலுக்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரஜினியைக் கண்டு அதிமுக, திமுக ஆகிய இருபெரும் திராவிடக்கட்சிகளும் அஞ்சி நடுங்குகிறார்கள்.ஆனால் ரஜினிக்கு அவரது ஜாதக கட்டம் சரியில்லையாம்.. "பூமியை வேண்டுமானால் வாங்கலாம்; பூமியை ஆளமுடியாது" என்கிறார் பிரபல சோதிடர் ஒருவர்.அவர் சொல்லும் காரணங்கள் தான் என்ன... வாங்க படிக்கலாம்..!

54 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் எழுச்சி தேவை. மக்கள் எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

1996ம் ஆண்டு திமுக தமாக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் அ.தி.மு.கவை மண்ணைக்கவ்வ வைத்தது.அப்போது இருந்தே ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ 'கழுவுற மீன்ல நழுவுற மீனாட்டம் ரசிகர்களின் கோரிக்கையில் இருந்து நழுவிக்கொண்டே இருக்கிறார்.

அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்காமல் பத்தோட பதினொன்றாக போய்விடுவோமோ என்கிற பயம் ரஜினியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.இதைவிடக்கொடுமை எங்கே நான்(ரஜினி) டி.ராஜேந்தர் போல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவேனா என அரசியல் ஆலோசகர்களிடம் ரஜினிகாந்த் தினந்தோறும் ஆலோசனை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஆன்மிகத்தில் அதித நம்பிக்கை கொண்டவர் ரஜினி.ஜோதிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் ரஜினி. இவரது ஜாதக ரீதியாக இவருக்கு அரசியல் ஒத்து வராது என்கிறார்கள் ஜோதிடர்கள். அதனால் தான் ஒவ்வொரு ஜோதிடர்களிடமும் அரசியல் பயணம் ,ஆன்மீக பயணம் குறித்து கருத்துக்கேட்டு வருகிறார் ரஜினி.  

            
 இதற்கிடையைில், ரஜினி வெளியிடவுள்ள அறிக்கை என்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு அறிக்கை வெளியானது. அதில், தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், டிசம்பருக்குள் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை குறித்துப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில், ரஜினி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்..'என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்". 

ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்.?அரசியலுக்கு வந்தால் ஆட்சியை பிடிப்பாரா ரஜினி.? இல்லை ஆன்மீகம் நடிப்பு இன்னும் பல ஆண்டுகள் கை கொடுக்குமா.? உடல்நிலை எப்படி இருக்கும் என்கிற கேள்விகளோடு பிரபல சோதிடர் சத்குரு. ஷாந்தகுமாரிடம் பேசினோம்.

ரஜினிகாந்த் ரசிகர் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாள் 12.12.1950. அடுத்த மாதம் அவரது பிறந்த நாள்.அவருக்கு வயது 70. இவர் மகர ராசி திருவோண நட்சத்திம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர். 2017ம் ஆண்டு முதல் ஏழரைச்சனி ஆரம்பமானது.வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து அவருக்கு ஜென்ம சனியாக மாற இருக்கிறது. அவரது ஜாதகப்படி நவம்பர் மாதம் குரு ஜென்மத்திற்கு வருகிறார். இது நல்லதல்ல. இந்த நேரத்தில் புது முயற்சிகள் கைவிடப்பட வேண்டும். குடும்பத்தில் பிளவு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். இந்த சூழ்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இவரிடம் உள்ள சாமூத்திரிகா லக்‌ஷனம் ஐஸ்வர்யங்கள் இவரை விட்டு போய்விடும்.

இவர் ஆன்மிகத்தில் இன்னும் அதிக ஈடுபாடு கொண்டால் கண்டிப்பாக அவரின் செல்வாக்கு உயரும். அரசியலில் நுழைந்தால் கடும் பிரச்சனைகள் மனநிம்மதி இழப்பு போன்றவை வரும். ஏன்? ஒரு கட்டத்தில் உயிருக்கு கூட ஆபத்து உருவாகும் சூழ்நிலை ஏற்படும். கட்சி ஆரம்பித்து மாவட்டம் மாவட்டமாக வீதி வீதியாக சென்றால் உடலில் தொற்று ஏற்பட நூறுசதவிகிதம் வாய்ப்பு உள்ளது.எதிரிகள் அதிகமாக உருவாகுவார்கள். இவரால் "பூமியை வாங்க முடியுமே தவிர பூமியை ஒருபோதும் ஆள முடியாது". மொத்தத்தில் 2025 செப்டம்பர் வரை எந்த  முயற்சிலும் இறங்காமல் இருக்க வேண்டும்.


நான் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக தொடர்ந்து முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் ஆறுமாதத்திற்குள் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்று கடந்த 2011ம் ஆண்டே கூறியிருந்தேன். ரஜினிகாந்த் அவரது சொந்த தொழிலான கலைத்தொழிலுக்கும், ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தால் இனிவரும் 5ஆண்டு காலத்தை, 5நிமிடமாக மாற்றிவிடலாம்.இவரது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் சந்தோசங்களை வரவழைத்துக்கொள்ளலாம். இது நிதர்ஷனமான உண்மை என்கிறார் அவர்.