நடிகர் ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ,  எனவே அவருக்கு  பாதுகாப்பு வழங்க  வேண்டியது அவசியம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ,  நடிகர் ரஜினிகாந்த்  வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன . சென்னையில் நடந்த துக்ளக்  ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  கடந்த 2071 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுள்களான ராமர் சீதை உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

அதேபோல் ,  கையில் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்றும்  துக்ளக் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளிகள் என்றும் அவர் பேசியது திமுக மற்றும்  பெரியாரிஸ்டுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .  இந்நிலையில்  துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக தகவல் வெளியானது  .  அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி பெரியாரிய இயக்கங்களும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர் .  அப்போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு  அவர்கள் கைது செய்யப்பட்டனர்.   அப்போது பேட்டி கொடுத்த அவர்கள் ,  நடிகர்  ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் தமிழ்நாட்டில் தலை காட்டவே முடியாது ,  உயிருடன் உலவ முடியாது என மிரட்டல் விடுக்கும்  வகையில் பேசினர் . 

ஆகவே  ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ,  எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தில் புகார் அளித்தனர் .  இந்நிலையில் மத்திய உளவுத்துறை மற்றும்  உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய தகவல் அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன அதில் ரஜினியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்  , ஆகவே  அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிலுஃ வலியுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிகிறது .   எனவே விரைவில் ரஜினிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு  அல்லது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.