மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்திருக்கிறார்.
சீன அதிபர் ஜின்பிங் 2 நாட்கள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிந்தார். இந்திய - சீன தலைவர்கள் இடையேயான முதல் நாள் சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரம் சிற்பங்களை இரு தலைவர்களும் சுற்றி பார்த்துதோடும் கலை நிகழ்ச்சிகளோடும் நிறைவடைந்தன. நாளை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சந்திப்பில் இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுர சந்திப்பை பல தரப்பினரும் வரவேற்றுவருகிறார்கள். மேலும் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்தது பலரும் பாராட்டிவருகிறார்கள். சமூக ஊடகங்களிலும் இந்தச் சந்திப்பும் மோடியுன் வேட்டி உடையும்  முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் இரு தலைவர்களின் மாமல்லபுரத்தில் நடந்த சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார். 
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பு படத்தைப் பதிவிட்டு, “அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி!” என்று  நையாண்டியாகத் தெரிவித்துள்ளார்.  நடிகர் பிரகாஷ்ராஜின் இந்தக் கிண்டலை ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் கமெண்ட் செய்துவருகிறார்கள்.