டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு முடியாவிட்டால் தமிழக அரசு விலகி கொள்ளலாம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மரணம், சசிகலா- ஒபிஎஸ் சண்டை, தீபா பிரச்சனை, எடப்பாடி - தினகரன் பிரச்சனை,  என இவை அனைத்தையும் தாண்டி தற்போது கமலஹாசன் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்ட்து என்ற கமலஹாசனின் கருத்து அமைச்சர்கள் மத்தியில் பூதாகரமாய் வெடித்துள்ளது.

கமலின் இத்தகைய கருத்துக்கு அமைச்சர்கள் அநாகரிகமாகவும், ஒருமையிலும் பதிலளித்தனர். இதனால் எதிர்கட்சிகளும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களில் பெரும்பாலானோரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கமல் முதலில் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் கூறியதால் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமல் டுவிட் செய்தார்.

இதைதொடர்ந்து தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கு கமல் குரல் கொடுத்துள்ளார் என அமைச்சர்கள் கேட்க, தற்போது மீண்டும் ஒரு ட்விட்டை கமல் பதிவு செய்துள்ளார்.

அதில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு முடியாவிட்டால் தமிழக அரசு விலகி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிப்படிப்பை முடிக்காததால் நீட் பற்றி எனக்கு தெரியாது எனவும், டெங்கு என் மகளுக்கு வந்ததால் அதுப்பற்றி எனக்கு தெரியும் எனவும் கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.